நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் - 1

செ.குளோரியான்

பாடல் - 1

கெடும் இடர் ஆய எல்லாம், கேசவா, என்ன, நாளும்
கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்,
விடம் உடை அரவில் பள்ளி விரும்பினான் சுரும்பு அலற்றும்
தடம் உடை வயல் அனந்தபுரநகர் புகுதும் இன்றே.

விஷமுள்ள ஆதிசேஷன் என்கிற பாம்பிலே பள்ளிகொள்ளுதலை விரும்பிய பெருமானுடைய திருத்தலம், வண்டுகள் ஒலிக்கிற நீர்நிலைகள், வயல்களைக்கொண்ட திருவனந்தபுரத்துக்கு இன்றே செல்வோம், ‘கேசவா’ என்று சொல்வோம், நம்முடைய இடர்களெல்லாம் கெடும், தினந்தோறும் கொடிய வினைகளைச் செய்கிற எமதூதர்களும் நம்மை நெருங்கமாட்டார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT