நூல் அரங்கம்

குறுந்தொகை

இரா.அறவேந்தன்

குறுந்தொகை: பதிப்பு வரலாறு (1915-2010)-இரா. அறவேந்தன்; பக்.232; ரூ.180; நற்றிணை: பதிப்பு வரலாறு (1915-2010)- க.பாலாஜி; பக்.104; ரூ.84; கலித்தொகை: பதிப்பு வரலாறு (1887-2010) - மு.முனீஸ்மூர்த்தி; பக்.224; ரூ.170; அகநானூறு: பதிப்பு வரலாறு (1918-2010) - மா.பரமசிவன்; பக்.160; ரூ.120; பரிபாடல்: பதிப்பு வரலாறு (1918-2010) - ம.லோகேஸ்வரன்; பக்.120; ரூ.90; காவ்யா, சென்னை-24; )044 23726882.

எட்டுத்தொகை நூல்களான நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, பரிபாடல், கலித்தொகை ஆகியவைகளின் பதிப்பு வரலாற்றை முழுவதுமாகக் கூறும் தனித்தனித் தொகுப்பு. எட்டுத்தொகை நூல்கள் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டாகப் பலராலும் ஆராய்ச்சிக்கு உள்படுத்தப்பட்டும், அறிமுகப்படுத்தப்பட்டும், பல்வேறு கால கட்டங்களில் பலரால் பதிப்பிக்கப்பட்டும் வருகின்றன. அவைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, ஒவ்வொரு நூலும் ஆண்டுகள் வரையறையோடு கூடிய பதிப்புடன் நூல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவைகளில் உள்ள பாடல்களுக்குத் தலைப்பிடல், கூற்று, திணை, புலவர் பெயர்க்காரணம், வரலாறு, வழக்காறு, இலக்கணக் குறிப்பு, உவமை, ஒப்புமையாக்கம், மேற்கோள் உள்ளிட்ட பல கூறுகளை உரையாசிரியர்களும், பதிப்பாசிரியர்களும் பயன்படுத்தியுள்ளனர் எனக் கண்டறிந்து, அவைகளை எளிமையாகவும், தெளிவாகவும் நூலாசிரியர்கள் விளக்கியுள்ளனர். விரிவான பின்னிணைப்பு, தெளிவான நூல் பட்டியல் போன்றவை இடம்பெற்றிருப்பது, எட்டுத்தொகை நூல்கள் குறித்து ஆய்வு செய்பவர்களுக்கு மிகவும் பயன்தரும். நூலாசிரியர்களின் அரிய முயற்சியும், கடின உழைப்பும் ஒவ்வொரு நூலிலும் பளிச்சிடுகின்றன.

திராவிட மொழிகளில் ஆராய்ச்சி - எஸ். வையாபுரிப்பிள்ளை; பக்.72; ரூ.40; அலைகள் வெளியீட்டகம், சென்னை-24; 044-24815474.

1946-ம் ஆண்டில் நாகபுரியிலும், 1951-ம் ஆண்டில் இலட்சுமணபுரியிலும் நடைபெற்ற அகில இந்திய கீழ்நாட்டுக் கலைஞரின் மாநாடுகளில் தமிழறிஞர் எஸ்.வையாபுரிப்பிள்ளை ஆற்றிய தலைமையுரைகளின் தமிழ் வடிவம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பாரமுல்லாவில் 35 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT