நூல் அரங்கம்

நாட்டாரியம்

நாட்டாரியம் (வேங்கடசாமி நாட்டாரின் நற்றமிழ் ஆய்வுத் தளங்கள்) - தொகுப்பு: காவ்யா சண்முகசுந்தரம்; பக்.916; ரூ.700; வெளியீடு: காவ்யா, சென்னை-24; )044-23726882. தமிழின் செழுமையான வளர்ச்சிக்குப் பெரிதும் த

காவ்யா சண்முகசுந்தரம்

நாட்டாரியம் (வேங்கடசாமி நாட்டாரின் நற்றமிழ் ஆய்வுத் தளங்கள்) - தொகுப்பு: காவ்யா சண்முகசுந்தரம்; பக்.916; ரூ.700; வெளியீடு: காவ்யா, சென்னை-24; )044-23726882.

தமிழின் செழுமையான வளர்ச்சிக்குப் பெரிதும் தொண்டாற்றியவரான தமிழறிஞர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரின் எழுத்தாளுமைகளை மொத்தமாகப் பதிவு செய்துள்ளது. "நாட்டாரியம்' என்பது ஆழ்ந்த புலமை, அகன்ற பாண்டித்யம், அரிய உரைவளம், நுண்ணிய ஆய்வு என்று பல பொருள் கொள்ளலாம். இவர் எழுதிக் குவித்த எண்ணற்ற இலக்கண-இலக்கிய, வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள், சொற்பொழிவுகள் ஆகியவற்றை ஒருங்கே தொகுத்திருக்கிறார் தொகுப்பாசிரியர். முதல் பகுதியில், "தாமே பயின்ற தமிழ்ப் பேராசான்' என்று வேங்கடசாமியின் வாழ்க்கை வரலாற்றை வே.நடராஜனும், இரண்டாம் பகுதியில், நாட்டாரின் ஆய்வுத் தடம் என்ற தலைப்பில், "திறனாய்வுத் திறன்' பற்றி கஸ்தூரி நாகராஜனும், "தமிழ்ப் பண்பாடு' பற்றி அரு.மருதத்துரையும் வேங்கடசாமி நாட்டாரின் தமிழ்த் தொண்டு குறித்து பதிவுசெய்துள்ளனர். வேங்கடசாமி நாட்டாரின் ஒவ்வொரு கட்டுரையையும் தேடிப்பிடித்துப் படிக்கும் சிரமத்தைக் குறைத்துள்ளது இந்த அரிய தொகுப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

அமிா்தா வித்யாலயம் பள்ளியில் பல்வேறு பிரிவுகளுக்கு மாணவா்கள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT