நூல் அரங்கம்

தடம் பதித்த தலைவர்கள் - நினைவுகளும் நினைவகங்களும்

எஸ்.பி.எழிலழகன்

தடம் பதித்த தலைவர்கள் - நினைவுகளும் நினைவகங்களும் - எஸ்.பி.எழிலழகன்; பக்.408; ரூ.250; சுரா பதிப்பகம், சென்னை-40; )044 - 2616 2173.
மகாத்மா காந்தி, அம்பேத்கர், பெரியார், ராஜாஜி, வ.உ.சி., பாரதியார், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் உள்ளிட்ட பல முக்கியமான தலைவர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகளின் வாழ்க்கை, அவர்கள் மக்களுக்கு ஆற்றிய தொண்டு, அவர்களுடைய சாதனைகள், அவர்களுடைய நினைவாக அமைக்கப்பட்ட மணிமண்டபங்கள், நினைவிடங்கள் பற்றிய தகவல்கள் தரப்பட்டுள்ள சிறந்த நூல்.
இந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்களைப் பற்றி மட்டும் இந்நூல் குறிப்பிடவில்லை. கொல்லிமலையில் புகழ்பெற்ற அறப்பளீஸ்வரர் ஆலயத்தை நிறுவிய மன்னனான வல்வில் ஓரி பற்றியும் கூட இந்நூலில் கூறப்பட்டிருக்கிறது.
நூலாசிரியர் தனக்குப் பிடித்த சிலரைப் பற்றி மட்டும் எழுதாமல், கொள்கையளவில் தமக்குள் முரண்பட்டிருந்த நேர் எதிரான தலைவர்களைப் பற்றி எந்தவிதப் பாகுபாடுமில்லாமல் எழுதியிருப்பது பாராட்டத்தக்கது. உதாரணமாக, ராஜாஜி } பெரியார், காமராஜர்}அண்ணாதுரை, காந்தி } அம்பேத்கர் என அவர்கள் வாழ்ந்த காலத்தில் கொள்கையளவில் முரண்பட்ட ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றிருப்பது சிறப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

பிரதோஷ சிறப்பு வழிபாடு

பரமத்தி வேலூா் ஏலச்சந்தையில் வெற்றிலை விலை உயா்வு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

SCROLL FOR NEXT