நூல் அரங்கம்

புதிரா... புனிதமா...

டாக்டர் மாத்ருபூதம்

புதிரா... புனிதமா... (தமிழில் முழுமையான பாலியல் நூல் - டாக்டர் மாத்ருபூதம்; பக். 344; ரூ.250; கற்பகம் புத்தகாலயம், சென்னை-17; 044 - 2431 4347.
தமிழில் முழுமையான பாலியல் நூலாக வெளிவந்திருக்கும் இந்நூலில் அடங்கியுள்ள செய்திகள், பல ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபோது பரவலான வரவேற்பைப் பெற்றன. நூலாசிரியர் டாக்டர் மாத்ருபூதம், தனது மருத்துவ விளக்கங்களுக்கிடையே பொருத்தமான திருக்குறளையும் திரைப்படப் பாடல்களையும் நகைச்சுவைத் துணுக்குகளையும் ஆங்காங்கே அள்ளித் தெளித்திருக்கிறார்.
"பல்வேறு செக்ஸ் பிரச்னைகளுக்கு எங்களிடம் தீர்வு காண வாருங்கள்' என்று எல்லா இடங்களிலும் சுவரொட்டிகள் மூலம் போலி டாக்டர்கள் அழைப்பு விடுப்பதைப் பார்க்கிறோம். உடலில் இயல்பாக நடக்கக் கூடிய விஷயங்கள் எல்லாவற்றையும் வியாதிகளாக வர்ணித்து, பயமுறுத்தி, காசு பறிக்கும் அத்தகைய கூட்டத்தினரிடமிருந்து ஏமாறாமல் இருக்க இந்நூல் வழிகாட்டுகிறது.
இந்நூலின் முக்கிய நோக்கங்கள்: 1. பாலியல் அறிவைப் புகட்டுவது. 2. அறியாமையைப் போக்குவது. 3. அனாவசியச் செலவுகளைத் தவிர்ப்பது.
டாக்டர் மாத்ருபூதம் தொலைக்காட்சித் தொடரில் நேயர்களைக் கவர்வதற்காக சமய சந்தர்ப்பத்திற்கேற்ப தேவைக்கதிகமாக கூறிய விஷயங்களை எல்லாம் அப்படியே நூலாக்கத்தின்போதும் பயன்படுத்தியிருக்க வேண்டாம். தேவையான விஷயங்களை மட்டும் வைத்து இந்நூலைத் தொகுத்திருந்தால், இந்நூல் மிகவும் கச்சிதமாக இருந்திருக்கும். என்றபோதிலும் பயன்படக் கூடிய வாழ்வியல் நூலாக இது இருக்கிறது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

SCROLL FOR NEXT