நூல் அரங்கம்

நீர் மேலாண்மை

சா.சம்பத்து

நீர் மேலாண்மை - பெருமாங்குப்பம் சா.சம்பத்து; பக்.256; ரூ.200; ரேணுகாம்பாள் பப்ளிஷர்ஸ், வேலூர்; 0416 - 2248221.
"நீரின்றி அமையாது உலகு' என்று சொல்லித் தெரியும் நிலை இப்போதில்லை. ஆனால் நீரைப் பாதுகாக்கும் முயற்சிகள், நீர் வளத்தை மேம்படுத்தும் செயல்களை எல்லாம் நாம் செய்கிறோமோ? என்றால், இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.
இந்நூலில் நீரின் தோற்றம், நீரின் இன்றியமையாமை, நீர் வளத்தைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? என்பன போன்ற விவரங்களை மிகவும் எளிமையாகச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர்.
தேசிய நதிநீர் இணைப்பு சாத்தியமா? ஏன் நதிகளை இணைக்க வேண்டும்? நீர்வழிச் சாலைகளால் என்ன பயன்? பருவமழை, காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயல் ஆகியவை உருவாவது எப்படி? நம் முன்னோர்கள் நீரைச் சேகரிக்க என்னவிதமான வழிமுறைகளைப் பின்பற்றினார்கள்? என்று நீர் தொடர்பான எல்லா விவரங்களையும் தெளிவாகச் சொல்லும் சிறந்த நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

SCROLL FOR NEXT