நூல் அரங்கம்

மறைந்து வரும் மரங்கள்

DIN

மறைந்து வரும் மரங்கள் - சுப்ரபாரதி மணியன்; பக்.116; ரூ.100; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-98; 044 - 2625 1968.
 உலக அளவில் வெப்பநிலை உயர்வதற்கான காரணங்களில் ஒன்று, மரங்களை வெட்டுவதும். நமதுநாட்டில் பல பாரம்பரிய மரங்கள் பல அழிந்து வருகின்றன. அவ்வாறு அழிந்து வரும் மரங்களில் இலுப்பை, இலந்தை, மாவிலங்கம், சந்தன வேங்கை, தான்றி, மகிழம், கோங்கு, விளா, சரக்கொன்றை, கடுக்காய், மகாவில்வம், திருவோடு, பூவரசு, வெட்டிவேர், சந்தனம், நாவல், உருத்திராட்சம் உள்ளிட்ட 30 மரங்களைப் பற்றி நாம் அறியாத பல செய்திகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
 ஒரு மரம், அதன் வளர்ச்சி, மரத்தின் பழம், காய், கனி, இலை, வேர் ஆகியவற்றின்
 மருத்துவகுணங்கள், அந்த மரம் எந்த கோயிலின் தலவிருட்சமாக உள்ளது? மரத்திலிருந்து கிடைக்கக் கூடியவற்றை எவ்வாறெல்லாம் பயன்படுத்துவது? தற்போது அந்த மரம் எந்தப் பகுதியில் அதிகமாக உள்ளது? என்பன போன்ற தகவல்கள் சுவையாகக் கூறப்பட்டுள்ளன.
 சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட இலுப்பை மரத்தேர் இன்றும் திடமாக இருப்பது, 400 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட தஞ்சைப் பெரிய கோயிலின் அம்மன் சந்நிதியின் வாயிற்கதவுகள் இன்றும் பொலிவோடு திகழ்வது, வசதியானவர்கள் கிரிக்கெட் பேட்டை சந்தன வேம்பு மரத்தில் செய்வது, ஊருக்கு வேலியாக தில்லை மரம் இருப்பது என மரங்களைப் பற்றிய அனைத்துத் தகவல்களாலும் நிரம்பி வழியும் இந்நூல், மரங்களைப் பாதுகாப்பது அவசியம் என்ற உணர்வை நம் உள்ளத்தில் நிறைக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

SCROLL FOR NEXT