நூல் அரங்கம்

நமது மரபணு  ஓர் உயிரியல் அற்புதம்

மோகன் சுந்தரராஜன்

நமது மரபணு  ஓர் உயிரியல் அற்புதம் -  மோகன் சுந்தரராஜன்; பக்.240; ரூ.150;  மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108;  044- 2536 1039.
மரபணு பற்றிய அறிவியல் கண்டுபிடிப்புகள் இப்போது பெரிய அளவில் வளர்ந்துவிட்டன.     
பாக்டீரியாவின் மரபணுவில் வேறுபாடுகள் தோன்றி மருந்துகளைச் செயலிழக்கக் செய்து
விடுகிறது.  ஆர்டெமிசினின் மருந்து, பென்சிலின்  ஆகியவை  ஒரு  நோயாளியின் உடலில் செயல்படாமல் போவது 
இதனால்தான். 
நமது உடலில் வலி தோன்றுவதற்குக் காரணமான மரபணு எஸ்என்பி -9 ஏ. இது 
உடலில் சோடியம் செல்லும் பாதைகளில் ஒன்றான என்ஏவி 1.7 என்பதை ஒழுங்குபடுத்துகிறது.  இந்தப் பாதையைச் செயலிழக்கச் செய்துவிட்டால்,  கொதிக்கும் நீரில் கைகளை வைத்தாலும் சூடு தெரியாது போய்விடும் 
என்பன போன்ற  பல அறிவியல் உண்மைகளைத் தெரிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது.  
இளஞ்சூல் தண்டு (ஸ்டெம் செல்) செல்லறைகள் உடலின் பல்வேறு உறுப்புகளைப் புதுப்பிக்க வல்லதாக உள்ளன.  இதயத்திலும், தசைகளிலும், இரத்த மூலக்கூறுகளிலும் ஸ்டெம் செல்லைப் பயன்படுத்தி  பழுதான உறுப்பு
களைச் சரி செய்யலாம் என்ற நிலை தோன்றியுள்ளது.  தற்போது ஸ்டெம் செல்களைச் சேகரித்து வைக்கும் வங்கிகள் தோன்றியுள்ளன 
என்பன போன்ற பல மரபணு சார்ந்த அரிய 
அறிவியல் உண்மைகளைத் தெரிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடல் கன்னி.. மானுஷி சில்லர்!

கோவையில் சோகம்: மின்சாரம் பாய்ந்து சிறுவன், சிறுமி பலி

ஹரியாணா: பஸ் விபத்தில் 7 பேர் பலி

7 நாள்களுக்கு பின் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

ஸ்ரீவரத சஞ்சீவிராய பெருமாள் கோயிலில் கருட சேவை

SCROLL FOR NEXT