நூல் அரங்கம்

நேர்மையின் பயணம்

DIN

நேர்மையின் பயணம் - பா.கிருஷ்ணன்; பக்.368; ரூ.400; கிழக்குப் பதிப்பகம், சென்னை-14; ) 044- 4200 9603.
 அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி மிகவும் பின்தங்கிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து, உலகம் போற்றும் கல்வியாளராக உயர்ந்தவர்.
 அவரின் வாழ்க்கை வரலாறு இந்நூல். கல்வித் துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமின்றி, சமூகத்தின் விளிம்பு நிலை மனிதர்கள் முதல் மிக உயர்ந்த பதவி வகிப்பவர்கள் வரை அனைவருக்கும் முன்னுதாரணமாக அவர் வாழ்க்கை அமைந்திருப்பதை இந்நூல் தக்க உதாரணங்களுடன் விளக்குகிறது.
 விடாமுயற்சி, உண்மை, உழைப்பு, நேர்மையைத் துணைகொண்டு ஊக்கத்துடன் போராடினால் அத்தனை பெருமைகளும் நம்மைத் தேடி வந்தடையும் என்பதை 38 அத்தியாயங்களில் அதற்குப் பொருத்தமான திருக்குறளுடன் விவரிக்கிறது இந்நூல்.
 சிறந்த பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலைக்கழகம் உருவாகக் காரணமாக இருந்த பாலகுருசாமி, 2002-இல் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பேற்ற அன்றைய காலகட்டத்திலேயே பல்கலைக்கழகத்தின் விடுதியிலும், உணவகத்திலும் சுற்றுச்சூழலுக்கு இன்று பெரும் சவாலாக உருவெடுத்திருக்கும் நெகிழிப் பொருள்களுக்குத் தடைவிதித்திருக்கிறார்.
 அவர் பொறுப்பு வகித்த காலத்தில் கல்வி, அறிவியல், கணினி, தேர்வாணையம், சமூக நீதி, சுற்றுச் சூழல் உள்ளிட்டவற்றுக்கு தனது பங்களிப்பை அளித்ததோடு மட்டுமல்லாது ஓய்வுபெற்ற பிறகும் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதிலும், கல்வி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குவதிலும் செலவிட்டு வருகிறார்.
 வெளிநாடுகளில் இருந்து வந்த அத்தனை அழைப்புகளையும் புறம்தள்ளிவிட்டு தனது உழைப்பை தாய் நாட்டுக்கு அர்ப்பணித்த அவரின் திறமையையும் உழைப்பையும் இந்த உலகம் இன்னும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை "நேர்மையின் பயணம்' எடுத்தியம்புகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

SCROLL FOR NEXT