நூல் அரங்கம்

தமிழ்த் திரையிசை ஆளுமைகள்

DIN

தமிழ்த் திரையிசை ஆளுமைகள் - ஞா.கற்பகம்; பக்.400; ரூ.300; கற்பக வித்யா பதிப்பகம், சென்னை-14; )044 - 2847 4510.
 தமிழ்மொழியில் முதல் பேசும் படம் 1931 - ஆம் ஆண்டில் வெளியானது. அதற்கு முன்னர் மெளனப் படங்களே வெளிவந்தன. தமிழ்த் திரைப்படம் பேசத் தொடங்கிய, பாடத் தொடங்கிய 1931 முதல் 2000 -ஆம் ஆண்டு வரையிலான 70 ஆண்டுகளில் தமிழ்த் திரைப்பட உலகில் பணியாற்றிய 61 இசையமைப்பாளர்கள், 64 பாடகர்கள், 54 பாடகிகள், 22 இசைக்கருவி இசைக்கும் கலைஞர்கள் என மொத்தம் 201 பேரைப் பற்றிய தகவல்கள் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் அறிமுகமான படங்களின் விவரங்களும் உள்ளன.
 பாபநாசம் சிவன் தொடங்கி ஸ்ரீகாந்த் தேவா வரையிலான இசையமைப்பாளர்கள், பி.பி.ரங்காச்சாரி தொடங்கி பாலக்காடு ஸ்ரீ ராம் வரையிலான பின்னணி பாடகர்கள், டி.பி.ராஜலட்சுமி முதல் நித்யஸ்ரீ வரையிலான பின்னணிப் பாடகிகள், வீணை எஸ்.பாலசந்தர் தொடங்கி வீணை ராஜேஷ் வைத்யா வரையிலான இசைக் கலைஞர்கள் என இவர்கள் அனைவரைப் பற்றிய தகவல்கள் சுவையாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
 திரைப்பாடலாசிரியராக மட்டுமே அறியப்பட்டிருக்கும் பாபநாசம் சிவன் இசையமைப்பாளராகவும், பாடகராகவும், நடிகராகவும் பங்காற்றியுள்ளார் என்பதும், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர், மாதிரிமங்கலம் நடேச ஐயர், களக்காடு ராமநாராயண ஐயர், முசிறி சுப்பிரமணிய ஐயர் போன்ற கர்நாடக இசை மேதைகள் திரைப்படத்துறையில் கணிசமாகப் பங்காற்றியுள்ளனர் என்பதும் பலரும் அறியாத செய்திகள்.
 இசையில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, தமிழ்த் திரையுலகின் இசை வரலாற்றை அறிய விரும்புவோருக்கும் இந்நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT