நூல் அரங்கம்

தேவதாசி முறை ஒழிப்பில் ஏமி கார்மைக்கேல்

DIN

தேவதாசி முறை ஒழிப்பில் ஏமி கார்மைக்கேல் - த. ஜான்சி பால்ராஜ்; பக். 96; ரூ. 120; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை- 50; ✆ 044 - 26251968.

முத்துலட்சுமி ரெட்டி, ராமாமிர்தம் அம்மையாருக்கு முன்பாகவே, அதாவது கால் நூற்றாண்டுக்கு முன்னரே தேவதாசி முறை ஒழிப்புப் பணியை மேற்கொண்ட அயர்லாந்து நாட்டுப் பெண்மணியான ஏமி கார்மைக்கேல் பற்றிய அறிமுக நூல்.

முந்தைய நூற்றாண்டுகளில் எளியவர்களுக்கு எட்டாக் கனியாக இருந்த கல்வியும் மருத்துவமும் கிடைப்பதில் பெரும் பங்காற்றிய கிறிஸ்துவ சமயப் பணியாளர்களில் பலர், சமூக சீர்

திருத்தங்களிலும் ஈடுபட்டனர். 19 - ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தில் தேவதாசியாக அர்ப்பணிக்கப்பட்டுத் தப்பி வந்த லட்சுமி என்ற சிறுமிக்கு அடைக்கலம் கொடுத்ததிலிருந்து தொடங்குகிறது ஏமியின் செயல்பாடுகள். பின்னர் நான்குநேரி அருகே டோனாவூரில் காப்பகம் அமைத்து இவ்விஷயத்தில் கூடுதலான அக்கறை செலுத்தத் தொடங்கினார் ஏமி. 1904 -ஆம் ஆண்டில் 6 கோயில்களிலிருந்து 17 குழந்தைகளை மீட்டதாக அவர் குறித்து வைத்துள்ளார். தவிர, தேவதாசிகளாகக் குழந்தைகளைக் கொடுப்பதற்கு எதிராக மக்கள் உதவியுடன் இயக்கமாகவே செயல்பட்டுக் காப்பாற்றி வந்திருக்கிறார் ஏமி.

1919- ஆம் ஆண்டில் இவருடைய சேவையைப் பாராட்டி "கைசர் ஹிந்த்' என்ற விருதினை சென்னை மாகாண ஆளுநரான பென்ட்லாண்ட் பிரபு அளித்திருக்கிறார் என்பதுகூட எங்கேயும் பதிவு செய்யப்படவில்லை. 1951 -ஆம் ஆண்டு வரை வாழ்ந்து தனது 83 - ஆம் வயதில் மறைந்த ஏமி கார்மைக்கேலின் வாழ்க்கையும் சமுதாயத் தொண்டும் ஒப்பிட இயலாதது.

வரலாற்றின் பக்கங்களில் அறியப்படாமல் புதைந்து கிடக்கும் இதுபோன்ற இன்னும் பல ஆளுமைகளை வெளிக்கொண்டுவர வேண்டிய அவசியம் தமிழுக்கு இருக்கிறது என்பதையே ஏமி கார்மைக்கேல் நூல் வெளிப்படுத்துகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தண்ணீரில் பிரசவம்...

ஒரு கோயில்: இரு நாடுகளின் சண்டை

பெண்கள் அழகாய் இருக்க..

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

SCROLL FOR NEXT