சைனா டவுன் மற்றும் சில சிறுகதைகள்- தமிழாக்கம் மதுமிதா; பக்.122; ரூ.160; ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடு, சென்னை 600083 ✆ 9600398660.
பிறமொழிப் படைப்புகளை வாசிக்கும் வாய்ப்ப்பு என்பது வாசகர்களுக்கு ஓர் உன்னத அனுபவம். அப்படி வாசிக்கும்போது அவர்களின் கலாசாரம், வாழ்க்கைப் போராட்டங்கள், நகைச்சுவை உணர்வுகள், பொழுதுபோக்கு அம்சங்கள், உள்ளிட்டவற்றை நாம் தெரிந்துகொள்ளலாம்.
இதில் கொரிய மொழி, ரஷிய மொழி, ஆங்கில மொழிகளிலிருந்து கதைகள் இடம்பெற்றுள்ளன. கொரிய, ரஷிய படைப்புகள் ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கம் பெற்றுள்ளன.
இந்நூலில் படைப்பாளிகளைப் பற்றிய சிறு குறிப்புகள் நூலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நீண்ட நெடிய சிறுகதை படைத்துள்ள தென்கொரிய ஆசிரியர் ஓ சுங் ஹி, பல உயரிய விருதகளைப் பெற்றுள்ளவர். ஆனால் அவர் உளவியலாகப் பாதிக்கப்பட்டவர் என்பது வியக்க வைக்கிறது.
ரஷிய மொழி இலக்கியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவது லியோ டால்ஸ்டாயின் இரு கதைகள். கதைகளை வாசிக்கும்போது அவரது ஜென் அனுபவம் நமக்கு விளங்குகிறது.
அர்னால்ட் பைன்-இன் கதையில் 60 ஆண்டு கால காதலைச் சொல்லியிருக்கிறார். வில்லியம் சோமர்செட் மோம் எழுதிய ஆங்கிலக் கதையில், திட்டமிடலுடன் வாழ்பவனும், மனம் போல வாழ்வோரும் வாழ்க்கையை எப்படி வாழ்கிறார்கள் என்பதை நகைச்சுவையுடன் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படி முடிக்கிறார்.
பிறமொழிப் படைப்புகளை வாசிக்கும்போது வாசகனுக்கு ஓர் அனுபவம் கிடைக்கும் என்றால் அதையே படைப்பாளன் வாசிக்கும்போது அவனுக்குப் பல கதை முடிச்சுகள் கிடைக்கும் என்பதையும் இந்நூல் உறுதிபடுத்துகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.