தினம் ஒரு தேவாரம்

82. காலை எழுந்து கடிமலர் - பாடல் 7

என். வெங்கடேஸ்வரன்


பாடல் 7:

ஆயம் உடையது நாம் அறியோம்
                                                          அரணத்தவரைக்
காயக் கணை சிலை வாங்கியும் எய்தும்
                                                          துயக்கு அறுத்தான்
தூய வெண்ணீற்றினன் சோற்றுத்துறை
                                                          உறைவார் சடை மேல்  
பாயும் வெண்ணீர்த் திரைக் கங்கை எம்மானுக்கு
                                                          அழகியதே


விளக்கம்:


துயக்கு=சோர்வு, தளர்ச்சி: ஆயம்=கூட்டம், இங்கே சேனை: அரணம்=கோட்டை, மூன்று கோட்டைகளைக் கொண்ட திரிபுரத்தவர்கள்: கணை வாங்குதல்=வில்லினை வளைத்தல்:

பொழிப்புரை:

திரிபுரத்து அரக்கர்களுடன் போருக்குச் சென்ற நாளில், சிவபெருமான் தன்னுடன் சேனைகளை அழைத்துச் சென்றாரா, இல்லையா என்பதை நாம் எவரும் அறியமாட்டோம். சிவபெருமான் வில்லினை வளைத்து, அதனில் அம்பினைப் பூட்டி, அம்பு எய்தி திரிபுரத்தவர்களை அழித்து, அவர்களால் தேவர்களுக்கு ஏற்பட்டிருந்த சோர்வினை நீக்கி, கோட்டைகள் எரிந்த பின்னர் அந்த சாம்பலைத் தனது மேனியில் பூசிக் கொண்டார். பாய்ந்து வந்த கங்கை நதி, அவனது நீண்ட சடைமுடியில் தங்கி மிகவும் அழகாக காணப்படுகின்றாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கதேச எம்.பி. கொலை: கொல்கத்தா குடியிருப்பிலிருந்து பெரிய பையுடன் வெளியேறிய இருவர்?

புஷ்பா - 2 இரண்டாவது பாடல்!

ஹரியாணாவின் 10 தொகுதிகள்: காற்று வீசுவது யார் பக்கம்?

ஜெயக்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

வாரணாசியில் பிரியங்கா காந்தி ‘ரோடுஷோ’!

SCROLL FOR NEXT