Specials

வரகரிசி பருப்புப் பொங்கல்

DIN

தேவையானவை:

வரகரிசி - 500 கிராம்
துவரம் பருப்பு - 50 கிராம்
பாசிப்பருப்பு - 50 கிராம்
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
முந்திரி - 50 கிராம்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 2
பெருங்காயத் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வரகரிசி, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு ஆகியவற்றை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு குழைய வேகவிடவும்.

அடுப்பில் நெய்விட்டு மிளகு, சீரகம் முந்திரியை வறுக்கவும்.

பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாயையும் நெய்யில் வதக்கவும்.

வதக்கிய அனைத்தையும் பொங்கலுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறி, 5 நிமிடம் கொதிக்கவிடவும். மீதம் உள்ள நெய், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.

- ராஜேஸ்வரி ரவிக்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT