மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் செளரவ் கங்குலி
நான் நலமுடன் உள்ளேன். எனக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி...
கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சௌரவ் கங்குலி இன்று வீடு திரும்பினார்.
சௌரவ் கங்குலிக்கு கடந்த 2-ஆம் தேதி லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு இதயத்தில் உள்ள 3 தமனிகளில் அடைப்பு இருந்தது தெரியவந்தது. அதில், ஒரு அடைப்பு ஸ்டென்ட் குழாய் பொருத்தப்பட்டு, அகற்றப்பட்டது.
சௌரவ் கங்குலியின் உடல்நிலையை மருத்துவக் குழுவினா் புதன்கிழமை காலை முழுமையாக பரிசோதித்தனா். அவா் உடல்நலம் தேறிவிட்டாா். அவா் புதன்கிழமையே வீடு திரும்புவதாக இருந்தது. இருப்பினும், மருத்துவமனையில் மேலும் ஒரு நாள் அவா் ஓய்வெடுக்க விரும்பினாா். எனவே சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பியுள்ளார் கங்குலி. மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்படவில்லை. அவருக்கு கொடுக்க வேண்டிய மருந்துகள் குறித்து அவரது குடும்பத்தினரிடம் விளக்கிக் கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மருத்துவமனையில் செய்தியாளர்கள் முன்னிலையில் கங்குலி கூறியதாவது: நான் நலமுடன் உள்ளேன். எனக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி. விமானத்தில் விரைவில் பறப்பேன் என நம்புகிறேன் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.