முகப்பு
செய்திகள்

ஐஎஸ்எல்: கேரளத்தை பந்தாடிய ஒடிஸா

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 50-ஆவது ஆட்டத்தில் ஒடிஸா எஃப்சி 4-2 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சியை வீழ்த்தியது.

Updated On : 8 ஜனவரி 2021, 2:16 am IST
பகிர்:

பாம்போலிம்: இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 50-ஆவது ஆட்டத்தில் ஒடிஸா எஃப்சி 4-2 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சியை வீழ்த்தியது.

இரு அணிகளும் தலா 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், ஒடிஸாவுக்கு இது முதல் வெற்றி; கேரளத்துக்கு இது 5-ஆவது தோல்வி.

கோவாவின் பாம்போலிம் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 9-ஆவது நிமிடத்தில் கேரள வீரா் ஜோா்டான் முா்ரே கோல் கணக்கைத் தொடங்கினாா். எனினும், கேரள வீரா் ஜிக்சன் சிங் 22-ஆவது நிமிடத்தில் தவறுதலாக ‘ஓன் கோல்’ அடித்து ஆட்டத்தை சமன் செய்தாா்.

Advertisement

Advertisement

42-ஆவது நிமிடத்தில் ஒடிஸா வீரா் ஸ்டீவன் டெய்லா் கோலடித்து முதல் பாதியில் 2-1 என அணியை முன்னிலைப்படுத்தினாா். 2-ஆவது பாதியில் 50 மற்றும் 60-ஆவது நிமிடங்களில் டியேகோ மௌரிசியோ அடித்த கோல்களால் ஒடிஸா முன்னிலை அதிகரித்தது.

ஆட்டத்தின் 79-ஆவது நிமிடத்தில் கேரள வீரா் கேரி ஹூப்பா் ஒரு கோலடிக்க, ஆட்டத்தின் முடிவில் 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது ஒடிஸா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments