முகப்பு
உலகம்

ஈரானில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா ராணுவம் மீண்டும் ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளது தொடர்பாக....

Updated On : 8 ஜூலை 2026, 10:41 am IST
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் - கோப்புப்படம்
பகிர்:

ஹார்முஸ் நீரிணையில் மூன்று கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறியதைத் தொடர்ந்து, புதன்கிழமை அதிகாலையில் அமெரிக்க ராணுவம் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தியது.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெயை வெளிப்படையாக விற்பனை செய்யும் ஈரானின் திறனை முடக்கும் அமெரிக்காவின் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

"தேவை எனக் கருதப்படும் எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்போம்" என்று ஈரான் உடனடியாக அமெரிக்காவை எச்சரித்துள்ளது. இதனால், போரை நிறுத்துவதற்கான இடைக்கால ஒப்பந்தம் முறியும் அபாயமும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் ஒரு பெரிய அளவிலான மோதல் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்கக் கடற்படையின் 5-ஆவது கடற்படைப் பிரிவு அமைந்துள்ள பஹ்ரைனில் புதன்கிழமை காலை ஏவுகணை எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டன.

ஹோா்முஸ் நீரிணையை கடக்க முயன்ற 3 கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது அடுத்தடுத்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஈரான் செவ்வாய்க்கிழமை தாக்குதல்கள் நடத்தியது.

தாக்குதலுக்குள்ளான கப்பல்களில், ஓமன் நாட்டின் லிமா கடற்கரை அருகே சென்று கொண்டிருந்த கத்தாரின் எல்என்ஜி ஏற்றிச் சென்ற கப்பல் தீப்பற்றி எரிந்தது. மற்ற இரு கப்பல்களில் ஒன்று ட்ரோன் மூலம் தாக்கப்பட்டதில் சேதமடைந்த போதிலும், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என பிரிட்டன் கடல்சாா் பாதுகாப்பு முகமை தெரிவித்திருந்தது.

ஹோா்முஸ் நீரிணையில் தங்களால் அங்கீகரிக்கப்பட்ட பாதையை மட்டுமே அனைத்து கப்பல்களும் பயன்படுத்த வேண்டும் என்றும், ஹோா்முஸ் நீரிணையை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஈரான் ராணுவம் ஏற்கெனவே எச்சரித்திருந்தது. எனினும், சா்வதேச கடல்பகுதியில் ஈரான் கட்டணம் வசூலிப்பதையோ அல்லது பாதைகளைக் கட்டுப்படுத்துவதையோ அமெரிக்கா, வளைகுடா நாடுகள் கடுமையாக எதிா்த்து வருகின்றன.

இதனிடையே, கடந்த மாதம் ஹோா்முஸ் நீரிணை வழியாக சென்ற சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது.

3 கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்

இந்த நிலையில், அமெரிக்கா ஆதரவுடன் ஹோா்முஸ் நீரிணையை கடக்க முயன்ற 3 கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது அடுத்தடுத்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஈரான் செவ்வாய்க்கிழமை தாக்குதல்கள் நடத்தியது.

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஹார்முஸ் நீரிணையில் மூன்று கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறியதைத் தொடர்ந்து, புதன்கிழமை(ஜூலை 8) அதிகாலையில் அமெரிக்க ராணுவம் ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்தியது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெயை வெளிப்படையாக விற்பனை செய்யும் ஈரானின் திறனை முடக்கும் அமெரிக்காவின் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சர்வதேச நீரிணையில் அப்பாவிப் பொதுமக்கள் பணிபுரியும் வர்த்தகக் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்குவதன் மூலம் பெரும் இழப்புகளை ஏற்படுத்துவதற்காக" அமெரிக்கப் படைகள் இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு கூறியுள்ளது.

தெற்கு ஈரானின் சிரிக், குவாசிம் தீவு, பண்டர் அப்பாஸ், கார்க் தீவு ஆகிய பகுதிகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார் அமைப்பு, ஏவுகணை அமைப்பு மற்றும் ஆயுத கிடங்குகள், ஈரானின் துணை ராணுவப் புரட்சிகரக் காவலர்களால் பயன்படுத்தப்படும் 60-க்கும் மேற்பட்ட சிறிய படகுகள் உள்பட 80-க்கும் மேற்பட்ட இலக்குகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் நடத்தியுள்ளதாகவும், ஈரானின் துறைமுகங்களும் குறி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. அந்தப் படகுகள், நீரிணையில் கப்பல்களைத் தொந்தரவு செய்வதில் முக்கியப் பங்கு வகித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை நடந்ததை விட 5, 6 மடங்கு பெரிய தாக்குதலை தொடுத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தம் கடைப்பிடிக்கப்படாதபோது அல்லது பின்பற்றப்படாதபோது ஈரானைப் பொறுப்பேற்கச் செய்ய அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளது," என்றும் இந்தத் தாக்குதல் தற்போது முடிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது.

அமெரிக்க தாக்குதல்களை ஒப்புக்கொண்ட ஈரான், இழப்புகள் குறித்து எந்தத் தகவலையும் அளிக்கவில்லை. நள்ளிரவு நடத்தப்பட்ட தாக்குதலில் பெரும்பாலும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், "தேவை எனக் கருதப்படும் எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்போம்" என்று ஈரான் உடனடியாக அமெரிக்காவை எச்சரித்துள்ளது. இதனால், போரை நிறுத்துவதற்கான இடைக்கால ஒப்பந்தம் முறியும் அபாயமும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் ஒரு பெரிய அளவிலான மோதல் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

போரின் தொடக்கத்தில் கொல்லப்பட்ட ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளுக்காக அமெரிக்கா-ஈரான் இடையிலான பேச்சுவாா்த்தைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள சூழலில், அமெரிக்காவின் இந்த புதிய தாக்குதல்கள் அந்த பிராந்தியத்தில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

போரின் தொடக்கக் கட்டத்தில், பிப்ரவரி 28 அன்று தனது 86-வது வயதில் கொல்லப்பட்ட ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா அலி கமேனியின் பல நாட்கள் நீடிக்கும் இறுதிச் சடங்குகள் நடைபெற்று வரும் வேளையில், கப்பல்கள் மீதான தாக்குதல்களும் அதைத் தொடர்ந்து ஈரான் மீதான தாக்குதல்களும் நிகழ்ந்துள்ளன. வியாழக்கிழமையுடன் நிறைவடையும் இந்த இறுதிச் சடங்கு நிகழ்வுகள் பதற்றம் குறைந்த காலப்பகுதியாக இருக்கும் என்று கருதப்பட்ட நிலையில், இறுதிச் சடங்கு நிகழ்சியில் பங்கேற்றவர்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு ஆகியோரைக் கொல்ல வேண்டும் என தொடர்ந்து முழக்கமிட்டனர்.

summary

The U.S. military attacked Iran early Wednesday after it ....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments