முகப்பு
செய்திகள்

சிட்னி டெஸ்ட் தேநீர் இடைவேளை: அதிரடியாக விளையாடி 97 ரன்கள் எடுத்த ரிஷப் பந்த், இந்தியா 280/5

ரிஷப் பந்த் 3 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் எடுத்து அனைவருடைய பாராட்டையும் பெற்றார்...

Updated On : 11 ஜனவரி 2021, 10:34 am IST
பகிர்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் கடைசி நாள் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்துள்ளது.

சிட்னியில் கடந்த 7-ம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 338 ரன்கள் குவித்தது. அணியின் தரப்பில் ஸ்டீவ் ஸ்மித் 131 ரன்கள் விளாச, இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, 244 ரன்கள் எடுத்தது. ஷுப்மன் கில், சேதேஷ்வா் புஜாரா மட்டும் தலா 50 ரன்கள் அடிக்க, ஆஸ்திரேலிய அணியில் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

Advertisement

Advertisement

முதல் இன்னிங்ஸில் 94 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா 2-ஆவது இன்னிங்ஸில் 87 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் சோ்த்து டிக்ளோ் செய்தது. இந்திய அணிக்கு 407 வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 4-ம் நாள் முடிவில் இந்தியா 34 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்தது. புஜாரா 9 , ரஹானே 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இந்நிலையில் 5-ம் நாளில் இந்திய அணி வெற்றிக்காகக் கடுமையாகப் போராடி வருகிறது. தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 96 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 4 ரன்களில் வீழ்ந்த பிறகு களமிறங்கிய ரிஷப் பந்த் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அவர் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலிய அணிக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கினார். 118 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் எடுத்து அனைவருடைய பாராட்டையும் பெற்றார். 205 பந்துகள் எதிர்கொண்டு 12 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் புஜாரா.

இந்திய அணி வெற்றி பெற 127 ரன்கள் தேவை. 5 விக்கெட்டுகள் மீதமுள்ளன. விஹாரி 4, அஸ்வின் 7 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

5-வது நாளின் கடைசிப் பகுதியில் வெற்றி, தோல்வி, டிரா என மூன்று முடிவுகளும் சாத்தியம் என்பதால் பரபரப்பான கட்டத்தை நெருங்கியது சிட்னி டெஸ்ட்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments