முகப்பு
விளையாட்டு

சென்னை ஓபன்: ரயோனிக் சாம்பியன்

சென்னை, ஜன.8: சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் கனடாவின் ரயோனிக் சாம்பியன் பட்டம் வென்றார்.  தரவரிசையில் 31-வது இடத்தில் உள்ள ரயோனிக், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் 6 (4)-7,

Updated On : 2 ஜனவரி, 2024 at 3:46 PM
பகிர்:

சென்னை, ஜன.8: சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் கனடாவின் ரயோனிக் சாம்பியன் பட்டம் வென்றார்.

 தரவரிசையில் 31-வது இடத்தில் உள்ள ரயோனிக், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் 6 (4)-7, 7-6 (4), 7-6 (4) என்ற செட் கணக்கில் இந்தப் போட்டியில் அதிகபட்ச தரவரிசையைக் (9) கொண்ட செர்பியாவின் டிப்சரேவிச்சை வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் 3 செட்களும் டைபிரேக்கிற்கு சென்றது குறிப்பிடத்தக்கது. 21 வயதாகும் ரயோனிக்கிற்கு இது இரண்டாவது ஏடிபி பட்டமாகும்.

 சென்னை நுங்கம்பாக்கத்தில் பிரதான கோர்ட்டில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரயோனிக் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடினார். முதல் கேமில் சர்வீஸ் போட்ட ரயோனிக் 2 ஏஸ் சர்வீஸ்களையும் அடித்தார். இதன்பிறகு 3-வது கேமிலும் அவர் இரண்டு ஏஸ் போட டிப்சரேவிச் தடுமாற்றம் கண்டார். 4-வது கேமில் அபாரமாக ஆடிய ரயோனிக், டிப்சரேவிச்சின் சர்வீûஸ முறியடிக்க முயன்றார். ஆனாலும் கடுமையாகப் போராடிய டிப்சரேவிச் அதை மீட்டார். 5-வது கேமில் அதிவேக ஏஸ்களை வீசினார் ரயோனிக். இதை டிப்சரேவிச்சால் எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் அந்த கேமில் ஒரு சர்வீûஸ கூட இழக்கவில்லை ரயோனிக். 6-வது கேமில் டிப்சரேவிச்சின் சர்வீûஸ ரயோனிக் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரும் போராட்டத்திற்கு பிறகு தனது சர்வீûஸ தனதாக்கினார் டிப்சரேவிச். இதன்பிறகு ரயோனிக் அபாரமாக ஆடியதால், தனது சர்வீûஸ காப்பாற்றிக் கொள்வதிலேயே கவனமாக செயல்பட்டார் டிப்சரேவிச். இதனால் அந்த செட் 6-6 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. இதையடுத்து முதல் செட்டின் வெற்றியைத் தீர்மானிக்க டைபிரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டது. டை பிரேக்கர் செட்டை துரதிருஷ்டவசமாக இழந்தார் ரயோனிக். இதனால் டிப்சரேவிச் 7-6 (4) என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். இந்த செட்டில் மட்டும் 11 ஏஸ்களை போட்டார் ரயோனிக். ஆனால் டிப்சரேவிச் 3 ஏஸ் மட்டுமே போட்டார். இந்த செட் 1 மணி நேரம் 1 நிமிடம் நடைபெற்றது.

 பின்னர் நடைபெற்ற இரண்டாவது செட்டின் முதல் கேமில் கடுமையாகப் போராடிய தனது சர்வீûஸ கைப்பற்றினார் டிப்சரேவிச். மறுமுனையில் ரயோனிக் தனது அபார ஏஸ்களால் எளிதாக தனது சர்வீûஸ வென்று கொண்டே இருந்தார். அதே நேரத்தில் டிப்சரேவிச்சின் சர்வீஸ்களை முறியடிக்க கிடைத்த சில நல்ல வாய்ப்புகளையும் வீணடித்தார்.

 இந்த செட்டில் ரயோனிக் சிறப்பான சர்வீஸ்களை அடித்தாலும், நல்ல ஷார்ட்களை ஆடத்தவறிவிட்டார். இதனால் 5 மற்றும் 7 கேமில் கிடைத்த பிரேக் வாய்ப்புகளை கடைசி நேரத்தில் கோட்டைவிட்டார் ரயோனிக். 9-வது கேமில் மிக மோசமான ஷார்ட்களை கையாண்டார் ரயோனிக். மேலும் கடைசி நேரத்தில் தடுமாற்றம் கண்டார். இதனால் முதல் செட்டைப் போலவே 2-வது செட்டும் டைபிரேக்கருக்கு சென்றது. இந்த செட்டில் அபாரமாக ஆடிய ரயோனிக், முதல் 5 சர்வீஸ்களையும் தனதாக்கி 5-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இறுதியில் அவர் 7-4 என்ற கணக்கில் டைபிரேக்கர் செட்டை கைப்பற்றினார். இதனால் 2-வது செட் 7-6 (4) என்ற கணக்கில் ரயோனிக் வசமானது. இந்த செட்டில் மட்டும் ரயோனிக் 14 ஏஸ்களை அடித்தார்.

 இதன்பிறகு மூன்றாவது செட் நடைபெற்றது. இந்த செட்டில் முதல் கேமில் ரயோனிக்கிற்கு சற்று நெருக்கடியை ஏற்படுத்தினார் டிப்சரேவிச். இதனால் அந்த கேமில் தனது சர்வீûஸ போராடியே கைப்பற்றினார் ரயோனிக். இதன்பிறகு முதல் 2 செட்களைப் போலவே ஏஸ்களை வீசினார் ரயோனிக். 4-வது கேமில் கிடைத்த பிரேக் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டு ஏமாற்றமடைந்தார் ரயோனிக். இதேபோல் 6 மற்றும் 8-வது கேமிலும் டிப்சரேவிச்சின் சர்வீûஸ முறியடிக்க கடுமையாகப் போராடிய ரயோனிக், கடைசிக் கட்டத்தில் அதை கோட்டைவிட்டார்.

 இதனால் இந்த செட்டும் டைபிரேக்கருக்கு சென்றது. இதில் மிகவும் கவனமாக விளையாடிய அவர், 5-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று அதன்பிறகு 7-4 என்ற கணக்கில் வென்றார்.

 இதனால் இந்த செட் 7- 6(4) என்ற கணக்கில் ரயோனிக் வசமானது. இதன்மூலம் ரயோனிக் 6 (4), 7-6 (4), 7-6 (4) என்ற கணக்கில் டிப்சரேவிச்சை வீழ்த்தி சாம்பியன் ஆனார். இந்த ஆட்டம் 3 மணி நேரம் 13 நிமிஷங்கள் நடைபெற்றது.

 ஷூ வீசியவர்!

 சாம்பியன் பட்டம் வென்ற  மகிழ்ச்சியில் தனது ஷூவை

 ரசிகர்கள் கூட்டத்தில் தூக்கியெறிந்தார் ரயோனிக். முதல்முறையாக  சென்னை ஓபனின் பிரதான சுற்றில்

 பங்கேற்ற அவர், சிறப்பாக  விளையாடி பட்டம் வென்றுள்ளார்.

 ரசிகர்களை கவர்ந்தார்

 இறுதிச்சுற்றின் ஆரம்பத்தில் மைதானத்தில் இருந்த ரசிகர்களில் பெரும்பாலானோர் டிப்சரேவிச்சுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினர். ஆனால் இரண்டாவது கேமின் பாதிக்குப் பிறகு ரசிகர்களின் ஆதரவு ரயோனிக் பக்கம் திரும்பியது.

 ரயோனிக்கின் சிறப்பான ஆட்டத்தால் அவர்கள் கவரப்பட்டனர். சென்னை ரசிகர்களின் ஆதரவோடும், உற்சாக  கரகோஷத்துக்கு மத்தியிலும் சாம்பியன் பட்டத்தை வென்றார் ரயோனிக். இரட்டையரில் பயஸ் உடன்  விளையாடியதாலும், 5-வது முறையாக சென்னை ஓபனில் பங்கேற்பதாலும் டிப்சரேவிச்சுக்கு சென்னை ரசிகர்கள்  அதிகம். சர்வதேச தரவரிசையில் 31-வது இடத்தில் இருப்பதால் முதல் சுற்றில் விளையாடாமலேயே நேரடியாக 2-வது சுற்றுக்குத் தகுதிபெற்றார் ரயோனிக். அதன்பிறகு நடைபெற்ற அனைத்து ஆட்டங்களிலும் நேர்

 செட்களிலேயே வெற்றி கண்டு இறுதிச்சுற்றுக்கு முன்னேறி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.