கோவை, ஜூன் 13: கோவையில் நடைபெற்று வரும் மாநில ஜூனியர் செஸ் போட்டியின் 10-வது சுற்றின் முடிவில் கோவை ஜா.கிரிமேன் 8 புள்ளிகளுடன் தனி முன்னிலை பெற்றுள்ளார்.
கோவை மாவட்ட செஸ் சங்கம் சார்பில் சன்மார்க்க சங்கக் கட்டடத்தில் ஜூனியர் செஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. புதன்கிழமை 9 மற்றும் 10-வது சுற்றுகள் நடைபெற்றன. 10-வது சுற்றின் முக்கிய முடிவுகள்:
சென்னை ஒசாமா சலீம், கோவை ஜா.கிரிமேனுடன் டிரா செய்தார். கோவை ஆர். கணேஷ், காஞ்சிபுரம் எஸ்.பிரசன்னாவைத் தோற்கடித்தார்.
கோவை எம்.ஈஸ்வர், கன்னியாகுமரி ஜே.நிஷ்வினைத் தோற்கடித்தார்.
புளூம் செஸ் அகாதெமியின் எஸ்.ஆனந்தராஜ், மதுரை பி.உமாமகேஸ்வரனைத் தோற்கடித்தார். கோவை வி.எஸ்.ரத்தினவேல் திருவள்ளூர் அஜய்கிருஷ்ணாவைத் தோற்கடித்தார்.
10-வது சுற்றின் முடிவில் கோவை வீரர் ஜா.கிரிமேன் 8 புள்ளிகளுடன் தனி முன்னிலை பெற்றுள்ளார்.
கோவை ஆர்.கணேஷ், காஞ்சிபுரம் எஸ்.பிரசன்னா, கன்னியாகுமரி ஜே.நிஷ்வின், புளூம் செஸ் அகாதெமியின் எஸ்.ஆனந்தராஜ் ஆகியோர் தலா 7.5 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளனர். இறுதிச் சுற்றில் கிரிமேன் வெற்றி பெற்றால் 9 புள்ளிகளுடன் ஜூனியர் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றுவார்.
இறுதிச் சுற்றில் கிரிமேன் தோல்வியடையும் பட்சத்தில், சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற இரண்டாமிடத்தில் உள்ள 4 பேருக்கு இடையில் கடும் போட்டி நிலவும்.
சாம்பியன் பட்டம் யாருக்கு என்பது வியாழக்கிழமை (ஜூன் 14) தெரிய வரும்.
இருவர் முன்னிலை: மகளிர் பிரிவில் சென்னை பி.பாலகண்ணம்மா, சென்னை ஏ.அக்ஷயா ஆகியோர் தலா 8 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கின்றனர்.
இறுதிச் சுற்றின் வெற்றியைப் பொறுத்து இந்த ஆட்டம் டைபிரேக்கர் வரை செல்ல வாய்ப்புள்ளது.
இரண்டு பேர் 7 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், 3 பேர் 6.5 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும் உள்ளனர்.
முக்கிய முடிவுகள்: காஞ்சியின் வி.ஸ்வேதா, சென்னை பி.பாலகண்ணம்மாவுடன் டிரா செய்தார். சென்னை ஏ.அக்ஷயா, விருதுநகர் ஆர்.விசாலாட்சியைத் தோற்கடித்தார்.
சென்னை எம்.சந்தியா, சென்னை ஜி.சுஷ்மிதாவைத் தோற்கடித்தார். புளூம் செஸ் அகாதெமியின் வி.வர்ஷினி, சென்னை என்.ஹேமாபிரியாவைத் தோற்கடித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.