விளையாட்டு

கோவையில் ஜூலை 5 முதல் மாநில பாட்மிண்டன் போட்டி

கோவை, ஜூன் 20: மாநில சப்-ஜூனியர் ரேங்கிங் பாட்மிண்டன் போட்டிகள் ஜூலை 5 முதல் 8-ம் தேதி வரை கோவையில் நடைபெறுகிறது. இது தொடர்பாக கோவை மாவட்ட பாட்மிண்டன் சங்கச் செயலர் சாந்தி ராவ், தினமணி நிருபரிடம் கூறி

ஆர். வேல்முருகன்

கோவை, ஜூன் 20: மாநில சப்-ஜூனியர் ரேங்கிங் பாட்மிண்டன் போட்டிகள் ஜூலை 5 முதல் 8-ம் தேதி வரை கோவையில் நடைபெறுகிறது.

இது தொடர்பாக கோவை மாவட்ட பாட்மிண்டன் சங்கச் செயலர் சாந்தி ராவ், தினமணி நிருபரிடம் கூறியது: கோவை மாவட்ட பாட்மிண்டன் சங்கம், ஸ்பார்க்ளர்ஸ் பாட்மிண்டன் அகாதெமி ஆகியவை இணைந்து இப்போட்டிகளை நடத்துகின்றன. 10, 13 மற்றும் 15 வயதுக்கு உள்பட்ட ஆடவர், மகளிர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு போட்டிகள் உள்பட மொத்தம் 12 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும்.

ஆடவர்களுக்கான போட்டிகள் கோவை வ.உ.சி. பூங்கா பகுதியில் உள்ள அலுவலர்கள் கிளப்பிலும், கோவை காஸ்மாபாலிடன் கிளப்பிலும், மகளிருக்கான போட்டிகள் அனைத்தும் ஜென்னீஸ் கிளப்பிலும் நடைபெறுகின்றன. ஆடவர்களுக்கான அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டிகள் ஜென்னீஸ் கிளப்பில் நடைபெறுகிறது.

போட்டியில் பங்கேற்க விரும்புவோர் தங்கள் மாவட்ட சங்கம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். போட்டிக்கான மொத்தப் பரிசுத் தொகை ரூ.75 ஆயிரம். போட்டியில் பங்கேற்க பதிவு செய்ய கடைசி நாள் ஜூன் 30 என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT