விளையாட்டு

முத்தரப்பு தொடர் மற்றும் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளுக்கான இந்தியா ஏ அணி அறிவிப்பு

4 நாள் போட்டிக்கான அணியில் 3 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள்...

சநகன்

இந்தியா - ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையிலான முத்தரப்புப் போட்டி மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டி ஆகியவற்றுக்கான இந்தியா ஏ அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முத்தரப்புப் போட்டிக்கான இந்தியா ஏ அணிக்கு உன்முக்த் சந்த் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டிக்கான அணிக்கு அம்பட்டி ராயுடு தலைமை தாங்குகிறார். 

தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான 4 நாள் போட்டிக்கான அணியில் 3 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். முகுந்த், பாபா அபரஜித், விஜய் ஷங்கர். ஆனால், முத்தரப்புப் போட்டிக்கான அணியில் ஒரு தமிழக வீரரும் இடம்பெறவில்லை.

முத்தரப்புப் போட்டி, ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 14 வரை சென்னையில் நடைபெற உள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள் கேரளாவில் ஆகஸ்ட் 18 முதல் நடைபெற உள்ளது.

முத்தரப்புப் போட்டிக்கான இந்தியா ஏ அணி:

உன்முக்த் சந்த் (கேப்டன்), மயங்க் அகர்வால், மனிஷ் பாண்டே, கருண் நாயர், கெதர் ஜாதவ், சஞ்சு சாம்சன், அக்‌ஷர் படேல், பர்வேஸ் ரஸூல், கரண் சர்மா, தவால் குல்கர்ணி, சந்தீப் சர்மா, ருஷ் கலாரியா, மந்தீப் சிங், குர்கீரத் சிங் மண், ரிஷி தவான்.

4 நாள் போட்டிக்கான இந்தியா ஏ அணி:

அம்பட்டி ராயுடு (கேப்டன்), கருண் நாயர், அபினவ் முகுந்த், அன்குஷ் பெயின்ஸ், ஸ்ரேயாஸ் ஐயர், பாபா அபரஜித், விஜய் ஷங்கர், ஜெயந்த் யாதவ், அக்‌ஷர் படேல், கரண் சர்மா, அபிமன்யூ மிதுன், ஷர்துல் தாகூர், ஈஷ்வர் பாண்டே, ஷெல்டன் ஜாக்ஸன், ஜிவான்ஜோத் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT