விளையாட்டு

முதல் டெஸ்ட்: ஷிகர் தவன் சதம்; இந்தியா முன்னிலை!

2-ம் நாளான இன்றும் இந்த ஜோடி மிகப் பொறுப்பாக ஆடியது. 57-வது ஓவரில் பவுண்டரி அடித்து...

சநகன்

கேலேவில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவன் சதம் அடித்துள்ளார்.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேலேவில் புதன்கிழமை தொடங்கியது. அஸ்வினின் அபார பந்துவீச்சால் இலங்கை அணி, முதல் இன்னிங்ஸில் 183 ரன்களில் சுருண்டது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 34 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் சேர்த்தது. ஷிகர் தவன் 53 ரன்களுடனும், கோலி 45 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

2-ம் நாளான இன்றும் இந்த ஜோடி மிகப் பொறுப்பாக ஆடியது. 57-வது ஓவரில் பவுண்டரி அடித்து தனது சதத்தைப் பூர்த்தி செய்தார் தவன்.  

உணவு இடைவேளையின் போது, இந்திய அணி 63 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து 44 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. தவன் 110, கோலி 86 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இருவரும் இணைந்து இதுவரை 199 ரன்கள் சேர்த்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

”மேஷ ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

SCROLL FOR NEXT