விளையாட்டு

பதவி விலகத் தயார்: தோனி அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணிக்கு என்னால் தான் எல்லாக் கெடுதல்களும் நடக்கின்றன, தலைமைப் பதவியிலிருந்து என்னை நீக்குவதால் இந்திய கிரிக்கெட்டுக்கு நன்மை ஏற்படும் என்றால்...

சநகன்

இந்தியா - வங்கதேசம் இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள மிர்பூரில் நேற்று நடைபெற்றது.

முதல் ஆட்டத்தில் 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கோட்டைவிட்ட இந்திய அணி, 2-வது ஒருநாள் போட்டியிலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை வங்கதேசம் வென்றுள்ளது. அந்த அணி, இந்தியாவுக்கு எதிராக முதல் முறையாக ஒரு நாள் தொடரை கைப்பற்றியுள்ளது.

இதனால் தோனியின் தலைமைப் பதவி பறிக்கப்படுமா, அல்லது அவர் பதவியிலிருந்து தானாக விலகுவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. போட்டி முடிந்தபிறகு தோனியிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தோனி பதிலளித்ததாவது:

என்னுடைய கிரிக்கெட்டை நான் மிகவும் அனுபவிக்கிறேன். என்னுடைய தலைமைப்பதவி தொடர்பான கேள்விகள் கேட்கப்படும் என்று முன்பே ஊகித்திருந்தேன். ஊடகங்கள் என்னை மிகவும் விரும்புகின்றன. இதுபோன்ற வினாக்கள் தொடர்ந்து கேட்கப்படுவதுண்டு.

இந்திய கிரிக்கெட் அணிக்கு என்னால் தான் எல்லாக் கெடுதல்களும் நடக்கின்றன, தலைமைப் பதவியிலிருந்து என்னை நீக்குவதால் இந்திய கிரிக்கெட்டுக்கு நன்மை ஏற்படும் என்றால் நான் பதவி விலகத் தயார். வெறும் அணி வீரராக மட்டும் ஆடத் தயார். இந்திய கிரிக்கெட் அணி ஜெயிக்கவேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன். கேப்டனாக யார் இருக்கிறார் என்பது முக்கியமல்ல. கேப்டன் ஆகவேண்டும் என்பது என் விருப்பமல்ல, அந்தப் போட்டியில் நான் இருந்ததும் இல்லை. என்னிடம் வழங்கப்பட்ட பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன். இப்போது தலைமைப் பதவியை என்னிடமிருந்து பறிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டால் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT