விளையாட்டு

அஸ்வினின் பொற்காலம்: 2015-ல் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்!

நாகபுரியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அஸ்வின். இதன்மூலம் 2015-ல் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.

சநகன்

நாகபுரியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அஸ்வின். இதன்மூலம் 2015-ல் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.

இந்த வருடம் அஸ்வினுக்கு மகத்தான வருடமாக அமைந்துள்ளது. அதிலும் துணைக்கண்டத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் குவித்து வருகிறார். நாகபுரி டெஸ்ட்  போட்டியில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்த வருடம் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் அஸ்வின்.

இந்த வருடம் அஸ்வின் ஆடிய 8 டெஸ்ட் போட்டிகளில் 55 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்தின் பிராட் உள்ளார். அவர் 13 டெஸ்ட் போட்டிகளில் 51 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

நடைபெற்று வரும் இந்தியா- தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அஸ்வின், மொத்தம் 24 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் ஜடேஜா (16 விக்கெட்டுகள்) உள்ளார்.

இந்த ஆண்டில் 6  முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அஸ்வின். இந்திய பெளலர்கள் ஓர் ஆண்டில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 9-வது முறையாகும். அஸ்வினுக்கு முன்னதாக 2004-ல் அனில் கும்ப்ளே 6 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், ஆசிய மண்ணில் 22-வது டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அஸ்வின் 15-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

உலகின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என இந்திய கேப்டன் விராட் கோலி, அஸ்வினைப் புகழ்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT