யு.எஸ். ஓபன் பட்டத்தை இருமுறை வென்ற ரஃபேல் நடால் இந்தமுறை 3-வது சுற்றிலேயே வெளியேறியுள்ளார்.
இத்தாலியைச் சேர்ந்த பெபியோ ஃபோக்னினி, நடாலை 3-6, 4-6, 6-4, 6-3, 6-4 என தோற்கடித்து அதிர்ச்சி அளித்துள்ளார். முதல் இரு செட்களில் தோற்றாலும் பிறகு மனஉறுதியுடன் போராடி நடாலை வீழ்த்தியுள்ளார் பெபியோ. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இதற்கு முன்பு, முதல் இரு செட்களைக் கைப்பற்றிய மேட்சுகளில் நடால் தோல்வியடைந்தது இல்லை. இந்தத் தோல்வி அவருக்குப் புதிய பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளது.
இந்த வருடம் நடாலால் ஒரு கிராண்ட்ஸ்லாமையும் வெல்லமுடியவில்லை. ஆஸ்திரேலிய மற்றும் பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் காலிறுதிப் போட்டிகளில் தோற்ற நடால் விம்பிள்டனில் 2-வது சுற்றில் வெளியேறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.