விளையாட்டு

மார்ட்டின் குரோவ்: ‘புதிய பாதை’ வீரரின் சாதனைகள்!

இன்றைய கிரிக்கெட் உலகில் நடைமுறையில் இருக்கும் பல விஷயங்களை பல வருடங்களுக்கு முன்பு வெற்றிகரமாகச் செய்து காட்டியவர்...

சநகன்

கடந்த சில வருடங்களாக அரியவகை ரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டுவந்த நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மார்ட்டின் குரோவ், காலமாகியுள்ளார். அவருக்கு வயது, 53. இதனையடுத்து, கிரிக்கெட் நட்சத்திரங்களும் நிபுணர்களும் ரசிகர்களும் சமூகவலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

1982-ல் அறிமுகமான குரோவ், 1995-ல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். 77 டெஸ்ட்டுகள் மற்றும் 143 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மார்ட்டின் குரோவின் சாதனைகள்

* அதிக டெஸ்ட் சதங்கள் எடுத்த நியூசிலாந்து வீரர் - 17

* 1992 உலகக்கோப்பையில், தொடர் நாயகன் (Man of the Series) விருது பெற்றவர்.

* டெஸ்ட் போட்டியில் 299 ரன்களில் அவுட் ஆன ஒரே வீரர்!

* இவருடைய 299 ரன்களே நியூசிலாந்து வீரர் எடுத்த அதிகபட்ச டெஸ்ட் ரன்னாக இருந்தது. பிறகு 2014-ல், மெக்கல்லம் 302 ரன்கள் எடுத்து அந்தச் சாதனையைத் தாண்டினார். இப்போதும் அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த நியூசிலாந்து வீரர்களில் குரோவ், 2-ம் இடத்தில் உள்ளார்.

* 1985-ம் ஆண்டு விஸ்டன் கிரிக்கெட் வீரராக குரோவ் தேர்வு செய்யப்பட்டார்.

* சுழற்பந்து வீச்சாளரை ஆரம்ப ஓவர்களில் வீசச் செய்வது, பிஞ்ச் ஹிட்டர்களைத் தொடர்ந்து பயன்படுத்துவது என இன்றைய கிரிக்கெட் உலகில் நடைமுறையில் இருக்கும் பல விஷயங்களை பல வருடங்களுக்கு முன்பு வெற்றிகரமாகச் செய்து காட்டியவர், குரோவ். 1992 உலகக்கோப்பையில் இதுபோன்ற புதுமையான யோசனைகளால் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தார்.

* இன்றைய டி20 வடிவத்துக்கு முக்கிய காரணமாக கிரிக்கெட் மேக்ஸ் என்கிற புதுவிதமான கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தினார் குரோவ். நாள் முழுக்க கிரிக்கெட் பார்க்கவேண்டியிருக்கிறது என்கிற புகார்களையடுத்து அவர் 3 மணி நேரம் ஆடக்கூடிய கிரிக்கெட் போட்டியை 1996-ல் அறிமுகப்படுத்தினார். பின்னர் அதுவே டி20-யாக இன்று வளர்ந்து நிற்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT