இந்தோனேசியா ஓபன் பாட்மிண்டன்: அரையிறுதியில் தோல்வியடைந்தார் பிரணாய்
இந்தோனேசியா ஓபன் பாட்மிண்டன் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் பிரணாய் குமார் ஜெப்பானை சேர்ந்த சகாய் கசூமசாவிடம் தொல்வி அடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.
இந்தோனேசியா ஓபன் பாட்மிண்டன் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் பிரணாய் குமார் ஜெப்பானை சேர்ந்த சகாய் கசூமசாவிடம் தொல்வி அடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.
இந்தோனேசியாவில் உள்ள ஜகார்த்தாவில் நடைபெறும் இப்போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பிரணாய் குமாரும், ஸ்ரீகாந்தும் அரையிறுதிக்கு முன்னேறினர்.
இதில் தரவரிசை பட்டியலில் 27-வது இடத்தில் இருக்கும் பிரணாய் காலிறுதியில் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற சீனாவின் சென் லாங்கை தோற்கடித்ததோடு, ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் பெற்ற மலேசியாவைச் சேர்ந்த லீ சோங் வேய் என்பவரையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி இருந்த நிலையில், 47-வது இடத்திலிருக்கும் சகாய் இடம் தோல்வி அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முதல் ஆட்டத்தில் 21-17 என்ற புள்ளிகளுடன் ஆட்டத்தைக் கைப்பற்றிய நிலையில், இரண்டாவது ஆட்டத்தில் 26-28 என்று தோல்வியடைந்தார் பிரணாய். மூன்றாவது ஆட்டத்தில் வெற்றி பெறுபவர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவர் என்ற நிலையில் 18-21 என்ற புள்ளிகளுடன் ஆட்டம் இழந்தார். 77 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரணாய் தோல்வியுற்று இந்தோனேசியா பாட்மிண்டன் போட்டியில் இருந்து வெளியேறினார்.
இந்தியாவைச் சேர்ந்த இன்னொரு வீரரான ஸ்ரீகாந்த் மற்றொரு அரையிறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான வான்-ஹோ ஸன் என்பவரை எதிர்கொள்கிறார்.