விளையாட்டு

உலகக் கோப்பை ஆட்டத்தின் போக்கையே மாற்றிய 10 தருணங்கள்

DIN

1996 உலகக் கோப்பை: இந்தியா-இலங்கை அரையிறுதி ஆட்டம்

முதன்முறையாக இலங்கை உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்றது. முதலில் ஆடிய இலங்கை 251-9 ரன்களை எடுத்திருந்தது. 

பின்னர் ஆடிய இந்திய அணி நவ்ஜோத் சித்துவை துரிதமாக இழந்தாலும், சச்சின் டெண்டுல்கர் மறுமுனையில் இலங்கையின் பந்துவீச்சை பதம் பார்த்தார். 2-ஆவது விக்கெட்டுக்கு 90 ரன்களை சேர்த்திருந்தார் சச்சின். இலங்கை கேப்டன் ரணதுங்க, அதிரடி வீரர் சனத் ஜெயசூரியாவை பந்து வீச அனுப்பினார். அப்பந்து சச்சின் கால்பட்டையில் பட்டு, விக்கெட் கீப்பர் ரொமேஷ் கலுவித்தாரனாவிடம் சென்றது. பந்து வீக்கெட் கீப்பரை கடந்து சென்று விட்டதாக நினைத்து ரன் ஓட கிரீûஸ விட்டு அகன்றார் சச்சின். தான் செய்வது பெரிய தவறு என உணர்ந்து திரும்புவதற்குள் அவரை ஸ்டம்ப்பிங் செய்தார் ரொமேஷ். 

அதன் பின் இந்திய பேட்டிங் நிலைகுலைந்து 7 விக்கெட்டுகள் வெறும் 22 ரன்களில் வீழ்ந்தது.
பின்னர் கொல்கத்தா ரசிகர்கள் வன்முறையில் இறங்கியதால், இலங்கை வென்றதாக நடுவர்கள் அறிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலை காதல், என்றென்றும்...!

சுழல், வேகப்பந்துகளை அட்டகாசமாக விளையாடும் சஞ்சு சாம்சன்!

கேஜரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் வெள்ளிக்கிழமை உத்தரவு

வாக்கு வங்கியை காத்துக்கொள்ள போராடுகிறது காங்கிரஸ்: அமித் ஷா

நடிகர் சத்யராஜும் 'ஆவேச’ குழந்தையும்!

SCROLL FOR NEXT