விளையாட்டு

ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: கிழிந்த ஷூ அணிந்து பந்து வீசிய ஷமி

DIN

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் முகமது ஷமி கிழிந்த ஷூ அணிந்துகொண்டு அர்ப்பணிப்பு உணர்வுடன் பந்துவீசியது இணையத்தில் பலரது பாராட்டைப் பெற்றுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெயிடு நகரில் வியாழக்கிழமை நடைபெற்று வருகிறது.

இரவு பகலாக நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 89 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் சோ்த்தது. 

ஆஸ்திரேலிய அணி  72.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதனைத்தொடர்ந்து 53 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழந்து 9 ரன்களை எடுத்துள்ளது.

இதனிடையே இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கிழிந்த ஷூ அணிந்துகொண்டு விளையாடினார்.

கிழிந்த ஷூ அணிந்து விளையாடிய நிலையிலும், மொத்தமாக 17 ஓவர்களை வீசி 41 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார். ஒரு விக்கெட்டையும் வீழ்த்தவில்லை என்றாலும், நான்கு பெயிடென் ஓவர்களை வீசி அணிக்கு வலுசேர்த்தார்.

இது குறித்து விளக்கமளித்துள்ள ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னர், வியூகத்தின் அடிப்படையிலேயே முகமது ஷமி கிழிந்த ஷூ அணிந்து விளையாடியுள்ளார். வீரரை நோக்கி பந்து வீசும்போது சரியான பிடிமானத்தில் வீரரிடம் சென்று சேரவேண்டும் என்பதால் அவ்வாறு அவர் செய்திருக்கலாம் என்று கூறினார்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.18 கோடி மதிப்பிலான வைர நகைகள் திருடிய வழக்கு குற்றவாளிகள் 2 போ் 1.5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

மக்களவைத் தோ்தல் பணிகளை ஒருங்கிணைக்க ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் பணியறை தொடக்கம்

வாக்குகள் மூலம் பாஜகவிற்கு பதிலளிக்க தில்லி மக்கள் தயாா் ஆம் ஆத்மி வேட்பாளா் குல்தீப் குமாா்

விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5.6 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு நுகா்வோா் ஆணையம் உத்தரவு

பூக்கடை பகுதிகளில் ஏப்.30-இல் மின்தடை

SCROLL FOR NEXT