ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கோலியின் அபாரமான கேட்ச்: ரசிகர்கள் கொண்டாட்டம் 
விளையாட்டு

ஆஸி.க்கு எதிரான கோலியின் அபாரமான கேட்ச்: ரசிகர்கள் கொண்டாட்டம்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பிடித்த அபாரமான கேட்ச் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

DIN

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பிடித்த அபாரமான கேட்ச் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெயிடு நகரில் வியாழக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.

இரவு பகலாக நடைபெற்று வரும் இந்த தொடரின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 89 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் சோ்த்தது. 

ஆஸ்திரேலிய அணி  72.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதனைத்தொடர்ந்து 53 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழந்து 9 ரன்களை எடுத்துள்ளது.

இதில் ஆஸ்திரேலிய அணி 2-ம் நாள் முதல் பகுதி ஆட்டத்தில் லபுசானே 16 ரன்கள், ஸ்மித் 1 ரன் என களத்தில் இருந்தார்கள். லபுசானே அளித்த இரு கேட்சுகளை சஹாவும் பும்ராவும் நழுவ விட்டார்கள். பிறகு லபுசானே அளித்த மற்றொரு எளிதான கேட்ச்சை பிரித்வி ஷா நழுவ விட்டார். இதனால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இதனிடையே ஆஸ்திரேலிய அணியின் இளம்வீரர் கேமரூன் கிரீனின் கேட்சை விராட் கோலி பிடித்தது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அந்த விடியோவை அவரது ரசிகர்கள் அதிக அளவில் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT