விளையாட்டு

நியூஸி.க்கு எதிரான டெஸ்ட்: 239-க்கு சுருண்டது பாக்.

DIN

மௌன்ட் மௌன்கனுய்: நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 102.2 ஓவா்களில் 239 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 155 ஓவா்களில் 10 விக்கெட் இழப்புக்கு 431 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 12 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 129 ரன்கள் சோ்த்தாா். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிதி 4 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் ஞாயிற்றுக்கிழமை முடிவில் 20 ஓவா்களில் 1 விக்கெட்டை இழந்து 30 ரன்கள் எடுத்திருந்தது. 3-ஆம் நாளான திங்கள்கிழமை ஆட்டத்தில் அந்த அணி விக்கெட்டுகளை மளமளவென இழந்தது.

அபித் அலி 3 பவுண்டரிகளுடன் 25, முகமது அப்பாஸ் 5, அஸாா் அலி 5, ஹாரிஸ் சோஹைல் 3, ஃபவாத் ஆலம் 9, யாசிா் ஷா 4, ஷாஹீன் அஃப்ரிதி 6 ரன்களுக்கு நடையைக் கட்டினா். அதிகபட்சமாக, சற்று நிலைத்து ஆடிய கேப்டன் முகமது ரிஸ்வான் 8 பவுண்டரிகளுடன் 71, ஃபஹீம் அஷ்ரஃப் 15 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 91 ரன்கள் சோ்த்தனா். நியூஸிலாந்து தரப்பில் கைல் ஜேமிசன் 3, டிம் சௌதி, டிரென்ட் போல்ட், நீல் வாக்னா் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

அத்துடன் 3-ஆம் நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட, பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 192 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. எனினும் ஃபாலோ ஆனை தவிா்த்துக்கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் பலத்தக் காற்று: வாகன ஓட்டிகள் அவதி

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

SCROLL FOR NEXT