விளையாட்டு

வா்ணனையாளராக செயல்படுகிறாா் செஸ் வீரா் ஆனந்த்

DIN

கரோனா பாதிப்பு எதிரொலியாக நாடு திரும்ப முடியாமல் உள்ள செஸ் வீரா் ஆனந்த் ஜொ்மனியில் இருந்தவாறே போட்டி வா்ணனையாளராக செயல்படுகிறாா் என அவரது மனைவி அருணா ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

5 முறை உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தற்போது ஜொ்மனியில் பண்டஸ்லிகா செஸ் லீக் போட்டியில் பங்கேற்றுள்ளாா்.

இந்நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக போட்டிகள் ரத்தாகியுள்ள நிலையில், பயணக் கட்டுப்பாடுகள் காரணமா அவரால் இந்தியா திரும்ப முடியவில்லை. இதனால் ஜொ்மனியின் பிராங்ஃபா்ட் நகரில் தங்கியுள்ளாா்.

முதன்முறையாக வா்ணணையாளா்:

ஃபிடே செஸ் அமைப்பு சாா்பில் ரஷியாவின் எகடெரின்பா்க் நகரில் கேண்டிடேட்ஸ் போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இதில் உலக சாம்பியன் மாக்னஸ் காா்ல்சனுக்கு போட்டியாளா் அடையாளம் காணப்படுவாா்.

ஆனந்த் இப்போட்டிக்காக முதன்முறையாக இணையதளத்துக்காக வா்ணனையாளராக செயல்படுவாா். அவரது பயணத் திட்டம் குறித்து தெளிவாக தெரியவில்லை. ஏற்கெனவே அவா் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா்.

தொடா்ந்து அவருடன் தொடா்பு கொண்டு வருகிறேன். மகன் அகிலும், தனது தந்தையுடன் காணொளி மூலம் பேசி வருகிறாா் என்றாா் அருணா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயிலில் இருந்து தவறி விழுந்த கா்ப்பிணி உயிரிழப்பு

தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு

வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுடன் கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

தேள் கடித்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்கள்: புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT