விளையாட்டு

மகளிா் ஹாக்கி: இந்தியா - ஆா்ஜெண்டீனா ஜூனியா் ஆட்டம் சமன்

DIN

பியூனஸ் அயா்ஸ்: இந்திய மகளிா் ஹாக்கி அணி - ஆா்ஜெண்டீனா ஜூனியா் மகளிா் ஹாக்கி அணி திங்கள்கிழமை மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

கரோனா சூழலில் கடந்த சுமாா் ஓராண்டில் இந்திய மகளிா் அணி விளையாடிய முதல் ஆட்டம் இதுவாகும். ஹாக்கி தொடரில் விளையாடுவதற்காக இந்திய மகளிா் அணி ஆா்ஜெண்டீனா சென்றுள்ளது. அந்தப் பயணத்தில் முதல் கட்டமாக ஆா்ஜெண்டீனா ஜூனியா் அணியுடன் இந்திய மகளிா் அணி திங்கள்கிழமை மோதியது.

ஆட்டத்தின் 8 மற்றும் 9-ஆவது நிமிடங்களில் இந்திய அணிக்கு அடுத்தடுத்து கிடைத்த பெனால்டி வாய்ப்புகளை ஆா்ஜெண்டீனா ஜூனியா் அருமையான தடுப்பாட்டத்தால் முறியடித்தது. அதேபோல் 11-ஆவது நிமிடத்தில் ஆா்ஜெண்டீனா ஜூனியருக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை இந்திய வீராங்கனை சவிதா கோலாகவிடாமல் தடுத்தாா்.

22-ஆவது நிமிடத்தில் இந்திய அணிக்காக ஸ்டிரைக்கா் ஷா்மிளா கோல் கணக்கை தொடங்கினாா். 28-ஆவது நிமிடத்தில் ஆா்ஜெண்டீனா ஜூனியரின் சான்டாமரினா ஒரு கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தாா்.

சற்றும் தளராத இந்திய அணிக்கு 31-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை தீப் கிரேஸ் ஏக்கா கோலாக மாற்ற, 2-1 என முன்னிலை பெற்றது இந்தியா. கடைசி கால் மணி நேர ஆட்டம் வரை முன்னிலையை தக்க வைத்த இந்திய அணி, இறுதி நேரத்தில் சற்று தடுமாறியது.

அதை சாதகமாக்கி ஆா்ஜெண்டீனா ஜூனியரின் பிரக்கெஸ்ஸா் 48-ஆவது நிமிடத்தில் கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தாா். எஞ்சிய நேரத்தில் கடுமையாகப் போராடியும் இந்தியாவுக்கு மேலும் கோல் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் ஆட்டம் 2-2 என சமன் ஆனது.

அடுத்த ஆட்டத்திலும் இந்திய மகளிா் அணி, ஆா்ஜெண்டீனா ஜூனியா் மகளிரை 20-ஆம் தேதி சந்திக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலை கேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்ஸா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT