கோப்புப்படம் 
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்: பவானி தேவி தோல்வி

ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் இந்தியாவின் பவானி தேவி தோல்வி அடைந்துளார்.

DIN

ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் இந்தியா சார்பாக பவானி தேவி மட்டுமே கலந்து கொண்டார். முதல் போட்டியில் துனுஷியாவின் நதியா பென்னை 15-3 என்ற கணக்கில் வீழ்த்தி ஒலிம்பிக் வரலாற்றில் வாள்வீச்சு போட்டியில் இந்தியாவுக்கு முதல் வெற்றியை பெற்று கொடுத்தார்.

இந்நிலையில், அடுத்த சுற்றில் உலக தர வரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள பிரான்ஸ் நாட்டின் மனோன் ப்ரூனெட்டிம் தோல்வி அடைந்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக கலந்து கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. என்னால் முடிந்த அளவு சிறப்பாக விளையாடினேன். இன்னும் நன்றாக விளையாட முடியவில்லை என்பதை நினைத்தால் வருத்தமாக உள்ளது. 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல விரும்புகிறேன். 

2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் முக்கியமான பாடத்தை கற்று கொண்டேன். நான் தகுதி பெறவில்லை எனிலும் என்னை அது வலுப்படுத்தியது. கடின உழைப்பும் மற்றும் உறுதியும் இருந்தால் இலக்கை எட்டலாம் என்பதையே ஒலிம்பிக் போட்டியிலிருந்து கற்று கொண்டேன். அடுத்த இலக்கை நோக்கி பயணிக்கவுள்ளேன்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துறையூா், புத்தனாம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

பெண்ணுக்கு வீட்டில் பிரசவம்: கிராம செவிலியா் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை

மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீா்க்க அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

சிவகங்கையில் இளைஞா் கொலை: 9 போ் கைது

தனியார் பல்கலை. சட்டத் திருத்த மசோதாவை தமிழக அரசு திரும்பப் பெற முடிவு செய்திருப்பது குறித்து...வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

SCROLL FOR NEXT