சச்சின் டெண்டுல்கர் 
விளையாட்டு

"இன்றைய விதிகள் அப்போது இருந்திருந்தால் சச்சின் ஒரு லட்சம் ரன்களை குவித்திருப்பார்"

"இன்றைய விதிகள் அப்போது இருந்திருந்தால் சச்சின் ஒரு லட்சம் ரன்களை குவித்திருப்பார்" என சோயிப் அக்தர் புகழாரம் சூட்டியுள்ளார்.

DIN

உலக கிரிக்கெட்டின் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 34,354 ரன்களை குவித்திருக்கிறார். ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த பெருமையும் அவரையே சாரும். 

இந்நிலையில், அவருக்கு புகழாரம் சூட்டிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், "இன்றைய விதிகள் அப்போது இருந்திருந்தால் சச்சின் ஒரு லட்சம் ரன்களை குவித்திருப்பார்" எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "இரண்டு புதிய பந்துகளை கொண்டு வந்துள்ளீர்கள். விதிகளை கடுமையாக்கியுள்ளீர்கள். நீங்கள் பேட்ஸ்மேன்களுக்கு முடிந்தவரை பலத்தை வழங்குகிறீர்கள். நீங்கள் மூன்று ரிவ்யூவை அனுமதிக்கிறீர்கள். சச்சினுக்கு (டெண்டுல்கர்) அந்த காலத்தில் மூன்று ரிவ்யூ வழங்கியிருந்தால், அவர் 1 லட்சம் ரன்களை எடுத்திருப்பார். கற்பனை செய்து பாருங்கள்" எனக் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், "சச்சின் பாவம் - நான் 'பாவம்' என்று சொல்கிறேன், ஏனென்றால் அவர் ஆரம்பத்தில் வாசிம் (அக்ரம்) மற்றும் வக்கார் (யூனிஸ்) ஆகியோருக்கு எதிராக விளையாடினார். அவர் ஷேன் வார்னுக்கு எதிராக விளையாடினார்.

பின்னர் பிரட் லீ மற்றும் சோயிப் அக்தருக்கு எதிராக விளையாடினார். பின்னர் அவர் அடுத்த தலைமுறை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விளையாடினார். அதனால்தான் நான் அவரை மிகவும் கடினமான பேட்ஸ்மேன் என்று அழைக்கிறேன்.

இப்போதெல்லாம் பேட்டிங் சார்ந்த கிரிக்கெட்டாக உள்ளது. முன்பு எல்லாம், வேகப்பந்து வீச்சாளர்கள் முடியை பறக்கவிட்டு, பவுன்சர்களை வீசிவுதை பேட்ஸ்மேன்களே பார்த்து மகிழ்வார்கள்" என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அலுவலக குத்தகை 2 கோடி சதுர அடியாகக் குறைவு

ஊழியா் கொலை: இளைஞா் கைது

கூடுதலாக 300 தனியாா் பேருந்துகளை இயக்கத் திட்டம்

காஞ்சிபுரத்தில் கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் 321 மனுக்கள் அளிப்பு

SCROLL FOR NEXT