தினேஷ் கார்த்திக்கின் சரவெடி, நிலைத்து நின்று ஆடிய டூ பிளெஸ்ஸி...பெங்களூரு அணி 192 ரன்கள் குவிப்பு
நான்கு சிக்சர்களை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இறுதியாக, 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு பெங்களூரு அணி 192 ரன்களை எடுத்தது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 54ஆவது ஆட்டம் மும்பை வாங்கடே மைதானத்தில் ஹைதராபாத், பெங்களூரு அணிக்கிடையே இன்று நடைபெற்றுவருகிறது. அதில், டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர் கோலி முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர், களமிறங்கிய ராஜத் பட்டிடார், டூ பிளெஸ்ஸி உடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 38 பந்துகளில் 48 ரன்களை எடுத்திருந்துபோது பட்டிடார் சுச்சித் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
இருப்பினும், நான்காவது ஆட்டக்காரராக களமிறங்கிய மாக்ஸ்வெல்லும் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். 24 பந்துகளி்ல் 33 ரன்கள் எடுத்திருந்தபோது அவரும் தனது விக்கெட்டை பறி கொடுத்தார். முதல் இன்னிங்ஸ் பரபரப்பான கட்டத்தை நோக்கி சென்றபோது, தினேஷ் கார்த்திக் களமிறங்கி சரவெடி நிகழ்த்தினார்.
நான்கு சிக்சர்களை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இறுதியாக, 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு பெங்களூரு அணி 192 ரன்களை எடுத்தது.
நிலைத்து நின்று ஆடிய டூபிளெஸ்ஸிஸ் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹைதராபாத் அணி சார்பாக சுச்சித் அதிகபட்சமாக இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.