கொல்கத்தா அணி வீரர்கள் 
விளையாட்டு

மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை...52 ரன்கள் வித்தியாசத்தில் கேகேஆர் வெற்றி

இஷான் கிஷனை தவிர்த்து மற்ற அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

DIN

ஐபிஎல் தொடரின் 56ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோதின. நவிமும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சைத தேர்வு செய்தார்.

கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் வெங்கடேஷ் ஐயர், ரஹானே ஆகியோர் நல்ல துவக்கம் அமைத்து கொடுத்தனர். அதிரடியாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 24 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து தனது விக்கெட்டை பறி கொடுத்தார். தொடர்ந்து ரஹானேவும் 25 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

எஞ்சிய பேட்டர்களில் நிதிஷ் ராணா, ரிங்கு சிங் மட்டுமே பொறுப்புடன் விளையாடினர். ராணா 26 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். ரிங்கு சிங் 23 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து, களமிறங்கிய மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இஷான் கிஷனை தவிர்த்து மற்ற அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் விளையாடிய கிஷன் 43 பந்துகளில் 51 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்த மும்பையால் 113 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 

கொல்கத்தா அணி சார்பாக அதிகபட்சமாக கம்மின்ஸ் மூன்று விக்கெட்டுகளையும் ரஸ்ஸல் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் புள்ளிபட்டியலில் கொல்கத்தா ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கெங்கவல்லி அருகே மண்சரிவால் குண்டும் குழியுமான சாலை மலைவாழ் மக்கள் அவதி

சிறுவனுக்கு பாலியல் தொல்லை இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: லாரி ஓட்டுநா் போக்ஸோவில் கைது

நாளைய மின்தடை: எடப்பாடி - பூலாம்பட்டி

சங்ககிரி அருகே மூதாட்டியை மிரட்டி 6 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு

SCROLL FOR NEXT