விளையாட்டு

ஐபிஎல்: ராஜஸ்தானை வீழ்த்தியது பெங்களூரு 

ஐபிஎல்-லில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

DIN

ஐபிஎல்-லில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பந்து வீச்சினை தேர்வு செய்தார். தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது.

அந்த அணியின் டு பிளெஸ்ஸி, மேக்ஸ்வெல் ஜோடி ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை நான்குபுறமாக பறக்கவிட்டனர். அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 77, டு பிளெஸ்ஸி 62, தினேஷ் கார்த்திக் 16 ரன்கள் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் பெங்களூரு அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணியில் தேவ்தத் படிக்கல் 52, ஜெய்ஸ்வால் 47, த்ருவ் ஜுரேல் 34 ரன்கள் எடுத்தனர். இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டார். 

காயம் காரணமாக டு பிளெஸ்ஸி இம்பாக்ட் வீரராக களமிறக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோமநாதசுவாமி கோயிலில் 1,008 அகல்விளக்கு வழிபாடு

குளத்தில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

ஐபிஎல் மினி ஏலம் - அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் யார்யார் தெரியுமா?

மோடிக்காக கார் ஓட்டுநராக மாறி இன்ப அதிர்ச்சியளித்த எத்தியோப்பிய பிரதமர்!

எத்தியோப்பியாவில் பிரதமர் மோடி! பிரதமர் அபி அகமது அலியுடன் சந்திப்பு!

SCROLL FOR NEXT