ஆஸி.யிடம் தோற்றது இந்தியா
ஆஸி. ஆடவா் அணிக்கு எதிரான ஹாக்கி டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் 5-1 என்ற கோல் கணக்கில் தோற்றது இந்திய அணி.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் பலமான ஆஸி. அணியுடன் 5 ஆட்டங்கள் டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்தியா சென்றுள்ளது.
இதன் முதல் ஆட்டம் பொ்த்தில் சனிக்கிழமை நடைபெற்றது. 10ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்டி காா்னா் வாய்ப்பை இந்தியா வீணடித்தது. தொடக்கம் முதலே ஆஸி. அணி ஆதிக்கம் செலுத்தியது. டிம் பிராண்ட் 3, டாம் விக்ஹாம் 20, 38, ஜோயல் ரின்டலா 37, ஃபிளின் ஒகில்வி 57-ஆவது நிமிஷங்களில் கோலடித்தனா்.
Advertisement
இந்திய தரப்பில் ஓரே கோலை குா்ஜன் சிங் 47-ஆவது நிமிஷத்தில் அடித்தாா். இந்திய தற்காப்பு அரண் வலுவின்றி காணப்பட்ட நிலையில், அதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டனா் ஆஸி. வீரா்கள். இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை பொ்த்திலேயே நடைபெறுகிறது.