மேக்ஸ்வெல்  
விளையாட்டு

ஐபிஎலில் இருந்து சிறிது காலம் ஓய்வு: மேக்ஸ்வெல்

உடலளவிலும், மனதளவிலும் நலம் பெற வேண்டியிருப்பதாக மேக்ஸ்வெல் பேட்டி.

DIN

நடப்பு ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் ஓய்வு எடுக்கவுள்ளதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மேக்ஸ்வெல் அறிவித்துள்ளார்.

ஐபிஎல் 2024 போட்டிகளில் பெங்களூரு அணி விளையாடிய 7 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இந்த அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான மேக்ஸ்வெல் விளையாடிய 6 போட்டிகளில் வெறும் 32 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மேக்ஸ்வெல் இடம்பெறவில்லை. இந்தப் போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோல்வியை தழுவியது.

மேக்ஸ்வெல் அணியில் இல்லாதது குறித்த கேள்விக்கு பதிலளித்த பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்ஸி, அவர் சிறிது காலம் ஓய்வு கேட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் மேக்ஸ்வெல் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

“உடலளவிலும், மனதளவிலும் நலம் பெற வேண்டியிருப்பதால் சில போட்டிகளில் விளையாடப் போவதில்லை. என்னால் சிறப்பாக விளையாட முடியாததால், எனக்கு பதிலாக வேறு வீரர் விளையாடட்டும் என்று கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் கூறியுள்ளேன்.

நலம் பெற்று மீண்டும் நடப்பு ஐபிஎல் தொடரிலேயே விளையாடுவேன் என்று நம்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடருக்கு முன்னதாக கடந்த நவம்பர் மாதம் முதல் மேக்ஸ்வெல் விளையாடிய 17 டி20 போட்டிகளில் இரு சதங்கள் உள்பட 520 ரன்கள் குவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருமல் மருந்து விவகாரம்: தமிழகத்தில் மருந்து நிறுவனங்களில் ஆய்வு செய்ய உத்தரவு

திருச்சியில் மூன்று இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நாளை(அக். 14) முதல் 4 நாள்கள் சட்டப்பேரவை கூட்டம்! - அப்பாவு

ஆம்பூர் அருகே ஆற்றில் தவறி விழுந்து இளைஞர் பலி

92 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT