கால்பந்து மைதானத்தில் வீரர் மீது மின்னல் பாயும் காட்சி 
விளையாட்டு

மின்னல் தாக்கி கால்பந்து வீரர் பலி!

இந்தோனேஷியாவில் மைதானத்தில் மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் செப்டெய்ன் ரெஹர்ஜா உயிரிழந்தார்.

DIN

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவாவின் பாண்டுங்கில் உள்ள சிலிவாங்கி மைதானத்தில் பாண்டுங் மற்றும் சுபாங் அணிகளுக்கு இடையே நட்பு ரீதியான கால்பந்து போட்டி கடந்த சனியன்று(பிப்.10) நடைபெற்றது. அப்போது மாலை 4.20 மணியளவில், இரு அணி வீரர்களும் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது சுபாங் அணியை சேர்ந்த 35 வயதான கால்பந்து வீரர் செப்டெய்ன் ரெஹர்ஜா மீது எதிர்பாராதவிதமாக மின்னல் பாய்ந்தது.

அதில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், பரிதாபமாக உயிரிழந்தார்.

மோசமான வானிலை காரணமாக வானம் கருமேகம் சூழ்ந்து காணப்பட்ட நிலையில், மைதானத்திலிருந்து 300 மீட்டர் உயரத்தில் மின்னல் தோன்றியதால், இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தோனேஷியாவில் இதேபோன்ற சம்ப்வங்கள் நிகழ்வது இது முதன்முறையல்ல. முன்னதாக கடந்த ஆண்டு, மைதானத்தில் கால்பந்து வீரர் ஒருவர் மீது மின்னல் தாக்கியதில் அவர் தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் தப்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: கரடியின் பிடியில் இந்திய பங்குச் சந்தை!

ஐபோன் 16இ மாடலுக்கு ரூ. 11,000 ஆஃபர்! எப்படி?

கற்பனை உலகில் வாழும் மோடி அரசும், அதன் ஆதரவாளர்களும்: ஜெய்ராம் ரமேஷ்

தமிழக செய்தித்துறையில் வேலைவாய்ப்பு! ஆக. 18 வரை விண்ணப்பிக்கலாம்!

ஓவல் டெஸ்ட்டிலிருந்து கிறிஸ் வோக்ஸ் விலகல்!

SCROLL FOR NEXT