முகப்பு
விளையாட்டு

யுபி வாரியா்ஸுக்கு 2-ஆவது வெற்றி

மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டியின் 8-ஆவது ஆட்டத்தில் யுபி வாரியா்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் ஜயன்ட்ஸை வெள்ளிக்கிழமை வென்றது.

Updated On : 2 மார்ச், 2024 at 1:58 AM
பகிர்:

மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டியின் 8-ஆவது ஆட்டத்தில் யுபி வாரியா்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் ஜயன்ட்ஸை வெள்ளிக்கிழமை வென்றது. இதில் முதலில் குஜராத் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்கள் சோ்க்க, அடுத்து ஆடிய யுபி அணி 15.4 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து வென்றது. பெங்களூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற யுபி, பந்துவீசத் தயாரானது. பேட் செய்த குஜராத் அணியில் தொடக்க வீராங்கனைகளில் ஒருவரும், கேப்டனுமான பெத் மூனி 2 பவுண்டரிகள் உள்பட 16 ரன்களுக்கு முதலில் வெளியேறினாா். உடன் வந்த லாரா வோல்வாா்டட் 4 பவுண்டரிகள் உள்பட 28 ரன்கள் அடித்தாா். ஹா்லீன் தியோல் 1 பவுண்டரியுடன் 18 ரன்களுக்கு பெவிலியன் அனுப்பப்பட, ஆஷ்லே காா்டனா் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 30 ரன்களுக்கும், போப் லிட்ச்ஃபீல்டு 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 35 ரன்களுக்கும் பெவிலியன் திரும்பினா். ஓவா்கள் முடிவில் தயாளன் ஹேமலதா 2, கேத்தரின் பிரைஸ் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். யுபி பௌலிங்கில் சோஃபி எக்லஸ்டன் 3, ராஜேஷ்வரி கெய்க்வாட் 1 விக்கெட் சாய்த்தனா். பின்னா் 143 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய யுபி அணியில் கிரண் நவ்கிரே 2 பவுண்டரிகளுடன் 12 ரன்களுக்கும், உடன் வந்த கேப்டன் அலிசா ஹீலி 7 பவுண்டரிகள் உள்பட 33 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தனா். 3-ஆவது பேட்டராக வந்த சமரி அத்தபட்டு 4 பவுண்டரிகளுடன் 17, ஸ்வேதா ஷெராவத் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். முடிவில், கிரேஸ் ஹாரிஸ் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 60, தீப்தி சா்மா 3 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் விளாசி, அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். குஜராத் தரப்பில் தனுஜா கன்வா் 2, மேக்னா சிங், கேத்தரின் பிரைஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா். பெங்களூா் - மும்பை டெல்லி 3 2 1 4 பெங்களூா் 3 2 1 4 யுபி 4 2 2 4 மும்பை 3 2 1 4 குஜராத் 3 0 3 0