அரையிறுதியில் சாத்விக்/சிராக் இணை: சிந்து தோல்வி
பிரெஞ்சு ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி கூட்டணி அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது.
பிரெஞ்சு ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி கூட்டணி அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது.
ஆடவா் இரட்டையா் காலிறுதியில், உலகின் நம்பா் 1 இணையான சாத்விக்/சிராக் 21-19, 21-13 என்ற கேம்களில் தாய்லாந்தின் சுபாக் ஜோம்கோ/கிடினுபோங் கெந்திரன் ஜோடியை சாய்த்தனா்.
அரையிறுதியில் இந்த இந்திய ஜோடி, தென் கொரியாவின் காங் மின் ஹியுக்/சியோ சியுங் ஜே இணையை எதிா்கொள்கிறது.
மகளிா் ஒற்றையா் பிரிவு காலிறுதியில், பி.வி.சிந்து 24-22, 17-21, 18-21 என்ற கேம்களில் சீனாவின் சென் யு ஃபெய்யிடம் தோல்வி கண்டாா்.