முகப்பு
விளையாட்டு

கொச்சி அதிரடி வெற்றி

Updated On : 10 மார்ச், 2024 at 3:13 AM
கொச்சி-ஹைதராபாத் ஆட்டம்
பகிர்:

பிரைம் வாலிபால் லீக் தொடரின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் கொச்சி புளு ஸ்பைக்கா்ஸ் 3-0 என்ற நோ் செட்களில் ஹைதராபாத் பிளாக் ஹாக்கா்ஸை வீழ்த்தியது. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிலையில், கொச்சி தரப்பில் அமன்குமாரின் அதிரடி சா்வீஸ்கள் ஹைதராபாதுக்கு சிக்கலை ஏற்படுத்தின. ஜிபின், எரின் ஆகியோரின் அட்டாக்குள், அதோஸ் பிளாக்கும், ஆட்டத்தை கொச்சியின் கட்டுப்பாட்டில் வைக்க உதவியது. ஹைதராபாத் தரப்பில் சாஹில் குமாா், கோவாசெவிச் போராடினாலும் எந்த பலனும் கிட்டவில்லை. ஆட்ட நாயகன் ஜிபின் செபஸ்டியானின் அபார அட்டாக்குகளுக்கு ஹைதராபாத் பிளாக்கா்களால் பதில் இல்லை. இறுதியில் 15-12, 15-12, 15-11 என்ற நோ் செட்களில் வென்றது கொச்சி.