முகப்பு
கிரிக்கெட்

சிஎஸ்கேவுக்கு எதிரான வெற்றி ஹைதராபாதுக்கான திருப்பு முனை: டேல் ஸ்டெயின்

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றது அந்த அணிக்கு திருப்பு முனையாக அமைந்துள்ளதாக டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.

Updated On : 19 ஏப்ரல் 2026, 4:46 pm IST
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர்கள் - படம் | AP
பகிர்:

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றது அந்த அணிக்கு திருப்பு முனையாக அமைந்துள்ளதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 10 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 6 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான வெற்றி ஹைதராபாத் அணிக்கு திருப்பு முனையாக அமைந்துள்ளதாக டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நடப்பு ஐபிஎல் தொடரை மெதுவாக தொடங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு, சிஎஸ்கேவுக்கு எதிரான வெற்றி மிகுந்த நம்பிக்கையை கொடுத்திருக்கும். அபிஷேக் சர்மா மற்றும் ஹென்ரிச் கிளாசன் நன்றாக விளையாடினர். அதன் பின், பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு சென்னை சூப்பர் கிங்ஸை கட்டுப்படுத்தினர்.

இன்னிங்ஸ் இடைவேளையின்போது, கிளாசனுடன் பேசினேன். சன்ரைசர்ஸ் அணி 10 அல்லது 15 ரன்கள் குறைவாக எடுத்திருப்பதாகக் கூறினார். இந்த இலக்கை அடையாமால் கட்டுப்படுத்த மிகவும் அபார பந்துவீச்சை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். அவர் கூறியது போன்று அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றுள்ளார்கள்.

சன்ரைசர்ஸ் வீரர்கள் மிகவும் அற்புதமாக ஃபீல்டிங் செய்தார்கள். அவர்கள் கடினமான கேட்ச்சுகளை பிடித்தார்கள். வெற்றி பெற்றாக வேண்டும் என்பதில் மிகுந்த அர்ப்பணிப்புடன் விளையாடினார்கள். வெற்றி பெற்ற பிறகு, லாங் ஆன் திசையில் ஃபீல்டிங்கில் இருந்த கிளாசன் ரசிகர்களுக்கு நன்றி கூறுவதைப் பார்க்க முடிந்தது. இந்த வெற்றி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு திருப்பு முனையாக அமைந்துள்ளது. புள்ளிகள் பட்டியலிலும் ஹைதராபாத் முன்னேறியுள்ளது என்றார்.

summary

Dale Steyn has stated that Sunrisers Hyderabad's victory in the match against Chennai Super Kings has proven to be a turning point for the team.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.