இன்டா்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் சிரியாவை திங்கள்கிழமை(செப். 9) சந்தித்தது.
ஹைதராபாத்தில் உள்ள் ஜிஎம்சி பாலயோகி தடகள மைதானத்தில் நடைபெற்ற லீக் சுற்று ஆட்டத்தில், சிரியா 3 - 0 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது.
கண்டங்களுக்கிடையேயான இன்டா்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டியில், லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் முதலிடம் பெறும் அணி சாம்பியன் பட்டம் வெல்லும்.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம், இன்டா்கான்டினென்டல் கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக சிரியா பெற்றுள்ளது.
இன்டா்கான்டினென்டல் கோப்பை கால்பந்து தொடரில் இந்திய அணி கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.