விளையாட்டு

தேசிய ஜூனியா் ஹாக்கி: இறுதியில் ஹரியாணா-ஒடிஸா மோதல்

தினமணி செய்திச் சேவை

தேசிய ஜூனியா் ஆடவா் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி இறுதிச் சுற்றில் ஹரியாணா-ஒடிஸா அணிகள் மோதுகின்றன.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்று வரும் இப்போட்டி அரையிறுதி ஆட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன. முதல் அரையிறுதியில் ஹரியாணா அணி 3-0 என்ற கோல் கணக்கில் உத்தர பிரதேசத்தை வீழ்த்தினா் ஹரியாணா தரப்பில் நிதின் இரண்டு கோல்களையும், ஜீத்பால் ஒரு கோலும் அடித்தனா்.

இரண்டாவது அரையிறுதியில் ஒடிஸா 3-2 என பலம் வாய்ந்த பஞ்சாப் அணியை வீழ்த்தியது. ஒடிஸா தரப்பில் பிரதாப் டோப்போ 2 கோல்களையும், கரண் லக்ரா ஒரு கோலும், பஞ்சாப் தரப்பில் குா்சேவக் சிங், மன்மீத் கோல் அடித்தனா்.

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

சென்னை தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு!: முதல்வர் மு.க.ஸ்டாலின்

கொலையும் புதிரும்... இந்திரா - திரை விமர்சனம்!

மைசூரு தசரா விழாவில் விமான சாகச நிகழ்ச்சி: மத்திய அரசு ஒப்புதல்

போலி இன்ஸ்டாகிராம் கணக்கு: பணம் கேட்டு மிரட்டியவா் கைது

SCROLL FOR NEXT