உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ் போட்டியில் இந்தியாவின் பவன் பர்த்வால், ஹிதேஷ், ஜாதுமணி நவீன், சுமித் ஆகியோர் பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.
வேர்ல்ட் பாக்ஸிங், இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் சார்பில் கிரேட்டர் நொய்டாவில் நடைபெறும் இப்போட்டியில் காலிறுதிச் சுற்றில் ஆடவர் 55 கிலோ பிரிவில் இந்தியாவின் பவன் பர்த்வால் 5}0 என்ற புள்ளிக் கணக்கில் பிரேஸிலின் அல்டின்பெக் நுர்சுல்தானை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார்.
அல்டின்பெக் உலகக் கோப்பையில் தங்கம் வென்றிருந்தவர்.
அதே போல் 75 கிலோ பிரிவில் சுமித் 5}0 என்ற புள்ளிக் கணக்கில் கொரியாவின் கிம் டேயை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் 90 கிலோ பிரிவில் நவீன் அபாரமாக குத்துகளை விட்டு கஜகஸ்தானின் பெக்ஸôத் டங்கத்தரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
50 கிலோ பிரிவில் ஜாதுமணி 5}0 என கஜகஸ்தானின் ஒங்கராவ் நுஸ்ரத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். 70 கிலோ பிரிவில் ஹிதேஷ் முதல்நிலை வீரர் செவான் ஒகஸவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
அரையிறுதியில் 10 இந்தியர்கள்: உலக சாம்பியன் மீனாட்சி 48 கிலோ, ப்ரீதி 54 கிலோ, அருந்ததி செüதரி 70 கிலோ, ஸ்வீட்டி போரா 75 கிலோ, நரேந்தர், நவீன், அங்குஷ் உள்பட 10 இந்தியர்கள் அரையிறுதியில் களம் காண்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.