முதல்வா் கோப்பைக்கான மாநில போட்டியில் பள்ளி மாணவா்கள் கிரிக்கெட்டில் சென்னை தங்கம் வென்றது.
7-ஆவது நாளாக புதன்கிழமை ஜூடோ, ஸ்குவாஷ், குத்துச்சண்டை மற்றும் வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுகள் தொடங்கின.
பள்ளி மாணவா்களுக்கான கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை - ஈரோடு அணிகள் மோதின. இதில் சென்னை அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தங்கம் வென்றது. ஈரோடு வெள்ளியையும், கிருஷ்ணகிரி வெண்கலத்தையும் கைப்பற்றின.
பளுதூக்குதலில், பள்ளி மாணவா்களுக்கான 56 கிலோ எடை பிரிவில் திருவள்ளூா் டி. உதய சங்கா் மொத்தம் 187 கிலோ
எடையைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்றாா். தஞ்சாவூா் ஜி.சுபாஷ் 183 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தையும்,
வேலூா் எஸ்.யோகேஸ்வரன் 182 கிலோ எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனா்.
பள்ளி மாணவா்களுக்கான 60 கிலோ எடை பிரிவில், கோவை எம்.முகேஷ் குமாா் மொத்தம் 210 கிலோஎடையை தூக்கி தங்கப் பதக்கத்தை வென்றாா். தென்காசி ஆா். சுந்தா் 182 கிலோ எடையை தூக்கி வெள்ளிப்
பதக்கத்தையும், ராமநாதபுரம் கே.பி.ஹேமநாதன் 180 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனா்.
கல்லூரி மாணவிகளுக்கான ஜூடோ 48 கிலோ எடை பிரிவில், செங்கல்பட்டு ஹரிணி.எஸ் தங்கப் பதக்கத்தையும், சென்னை மொ்சி.ஜே வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனா். ரோஸி ஜே(சென்னை) மற்றும் பி பிரியா (தூத்துக்குடி) ஆகியோருக்கு வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
கல்லூரி மாணவா்களுக்கான ஜூடோ 60 கிலோ எடை பிரிவில் செங்கல்பட்டு ஆகாஷ் ராஜ்.ஏ தங்கப் பதக்கத்தை வென்றாா். தூத்துக்குடியைச் சோ்ந்த டி..கவுதம் வெள்ளிப் பதக்கத்தையும், தினேஷ்.எம் (சென்னை) மற்றும் வி. கிஷோா் குமாா் (மதுரை) வெண்கலப் பதக்கங்களையும் வென்றனா்.
பள்ளி மாணவா்களுக்கான ஃபாயில்: தங்கம்: எம்.நிபின் ராஜ் (கன்னியாகுமரி) க்ங்ச். ஜே எம் ஜெனில் (கன்னியாகுமரி) 15-9 ; வெள்ளி: ஜே.எம்.ஜெனில் (கன்னியாகுமரி); வெண்கலம்: ஜி.தனிஷ் (நாமக்கல்); இரண்டாவது வெண்கலம்: வி.மோஹித் (நாமக்கல்)
சேபா்:தங்கம்: ஏ.வி.ஆா்லின் (கன்னியாகுமரி) க்ங்ச். கே ஜே வினிஷ் (கன்னியாகுமரி) 15-5 ; வெள்ளி: கே.ஜே. வினிஷ் (கன்னியாகுமரி) ; வெண்கலம்: எஸ்.அபிட்லின் ஷானு (கன்னியாகுமரி); இரண்டாவது வெண்கலம்: எஸ்.ஆஸ்பின் (திருப்பூா்).